Nayanthara

தமிழில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ஹீரோயின் சப்ஜெட்டாக தேர்ந்தெடுத்து நடிக்குமிவர் தற்போது படம் தயாரிக்கும் பணியையும் செய்து வருகிறார். அறம் படமெ இவரது தயாரிப்புதான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது காதலர் விக்னேஷ் சிவனுக்காக ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் நடிகர் அதர்வா நாயகனாக நடிக்க உள்ளாராம்.

Atharvaa

இமைக்கா நொடிகள் படத்தின் நயனுடன் அதர்வாவும் இணைந்து நடித்தார். அப்போது அதர்வாவின் நடிப்பு திறமையை பார்த்த நயன் இந்த படத்தில் அவ்ருக்கு வாய்ப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது. படத்திற்கு இதயம் முரளி என்று பெயர் பரிசீலனையில் உள்ளதாம். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.