அதர்வா முரளி முதன்முதலாக போலீஸ் கேரக்டரில் நடிக்கும் படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

டார்லிங்’ இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கவுள்ள அடுத்த படம் போலீஸ் சம்பந்தப்பட்ட படம் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தில் முதன்முதலாக அதர்வா-ஹன்சிகா ஜோடியாக நடிக்கவுள்ளனர். இந்த படத்தை அரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சாம் CS இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க பாஸ்-  அதர்வா முரளி நடிக்கும் ஒத்தைக்கு ஒத்த

தயாரிப்பாளர் திருமதி காவ்யா வேணுகோபால் இந்த படம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘ஒரு விநியோகத்தரான எனக்கு சுவாரஸ்யமான, பலமான கூட்டணியின் பலன் நன்கு தெரியும். சரியான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு படத்தின் பாதி வெற்றியை தீர்மானிக்கும். இப்படத்தின் கதையை இயக்குனர் சாம் ஆண்டன் என்னிடம் முதல் முறையாக சொன்ன பொழுதே இப்படத்திற்கு கதாநாயகனாக அதர்வா நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் என நானும் எனது அணியும் முடிவு செய்தோம். இன்னும் பெயரிடப்படாத இப்படம், அதர்வாவை நிச்சயம் டாப் ஹீரோக்களின் பட்டியலில் கொண்டு போய் சேர்க்கும். இளைஞர்களிடம் ஹன்சிகாவுக்கு இருக்கும் ஆதரவும் வரவேற்பும் வியக்கத்தக்கது. இந்த புது ஜோடி வர்த்தக தரப்பிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பை பெரும்’ என்று கூறினார்