அதர்வா நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு கடந்த மாதமே தயாரான ‘செம போத ஆகாதே’ திரைப்படம் மே 11ஆம் தேதியே ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென கடைசி நேரத்தில் திடீரென மே 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி இந்த படம் ஜூன் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் திரைப்பட வெளியீட்டு குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தேதியிலாவது இந்த படம் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

அதர்வா, மிஷ்தி, அர்ஜெய், விரோஷன், அனைகா சோட்டி, ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.. இவர்தான் அதர்வா அறிமுகமான ‘பாணா காத்தாடி’ படத்தை இயக்கியவர் என்பது தெரிந்ததே. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் காட்சி, இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.