புதுமுக இயக்குனர் ஸ்ரீகணேஷ்யுடன் இணையும் அதர்வா

புதுமுக இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘8 தோட்டாக்கள்’ தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் இயக்குனர் ஸ்ரீகணேஷ்க்கு திரையுலகினர் பாராட்டு தெரிவித்தனர்.

ஸ்ரீ கணேஷ் இந்த படத்தை தொடர்ந்து அதர்வாவை வைத்து படம் இயக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதர்வா தற்போது ”செம போத ஆகாதா” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ஸ்ரீகணேஷ்யுடன் நடிப்பார் என தெரிகிறது.

மேலும் இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு அறிவிக்கப்படவில்லை.அதேபோல இப்படத்தை கூறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது