நடிகர் அதர்வா முரளி தமிழ் திரைப்படங்களில் முன்னணி வெற்றி நாயகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இமைக்கா நொடிகள் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குருதி ஆட்டம் என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடை பெற்று வருகிறது.

அதர்வா முரளியின் புதிய படமாக ஒத்தைக்கு ஒத்த என்ற திரைப்படம் தயாராகவிருக்கிறது. அதிரடி படமாகவும் கல்லூரியில் ஏற்படும் பிரச்சினைகளை விளக்கும் படமாக இது தயாராகவிருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பர்ணேஷ் இயக்குகிறார்.