‘8 தோட்டாக்கள்’ பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில்
அதர்வா நடிக்கும் படம்’குருதி ஆட்டம்’. இப்படம் ஆக்ஷன் கலந்த
திரில்லர் படமாக உருவாக உள்ளது.

இப்படத்தில், அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர்
ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் ராதிகா
சரத்குமார், ராதாரவி நடிக்கவுள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  இயக்குநர் அவதாரம் எடுத்த ஆர்.ஜே.பாலாஜி – ஹீரோ யார் தெரியுமா?

‘பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் புரொடக்ஷன் – ராக்ஃபோர்ட்
எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் இணைந்து
தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா
இசையமைக்கவுள்ளார்.

சமீபத்தில், படத்திற்கான பூஜை போடப்பட்டது. தற்போது, இந்த
படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி உள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  மேயாத மான் டீசா்

அதர்வா நடிப்பில் `பூமராங்’, `100′ உள்ளிட்ட படங்கள் விரைவில்
திரைக்கு வர இருக்கின்றன.