களவாணி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஒவியா அதன் பின் சில படங்களில் நடித்தார். ஆனால் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைத்து தரப்பினர் மனதையும் கொள்ளையடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலங்களும் பலருக்கும் சினிமா வாய்ப்புகள் கிடைக்க பெற்று தற்போது பிசியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் ஒவியாவுக்கும் சினிமா வாய்ப்புகள் கிடைக்க பெற்று நடித்து வருகிறார்.

நடிகர் ஆதி, ஒவியாவை வைத்து இயக்குனர் டி.கே. இயக்கத்தில் உருவாகி வரும் படம் காட்டேரி. நடிகர் ஆதி சில தவிர்க்க முடியாத பிரச்சனைகள் காரணமாக திடீரென இந்த படத்திலிருந்து விலகிவிட்டார். எனவே அந்த படத்தில் நடிக்க வைபவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஆதி வெளியேறி பிறகு என்ன காரணமோ தெரியவில்லை நடிகை ஒவியாவும் இந்த படத்திலிருந்து வெளியேறி விட்டார். எனவே அவருக்கு பதிலாக இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஹிப் ஆப் தமிழா மீசைய முறுக்கு நாயகி ஆத்மிகா நடிக்க கமிட்டாகி உள்ளார். காட்டேரி படமானது ஆக்ஷன் த்ரில்லர் மூவியாக உருவாகி வருகிறது. நடிகை ஆத்மிகா இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதை எண்ணி மகிழ்ச்சியில் திக்குமுக்காடி வருகிறார். அந்த மகிழ்ச்சியை தனது இணையதள பக்கத்தில் ரசிகர்களிடத்தில் தெரியபடுத்தியுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முசைய முறுக்கு நாயகி ஆத்மிகா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் ஃபுல் ப்ராக் டிரஸ் அணிந்து கொண்டு தேவதை போல ஸ்லோமோஷனில் சுற்றுவது போல இருக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அவரது வீடியோவை பார்த்த ரசிகர்கள் ரொம்ப சூப்பராக இருக்கு..! அழகான ஸ்டைல் .! பார்த்த எங்களுக்கும் சுத்துதே என்று தங்களது பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

#fairytale moment 👸🏻👑

A post shared by aathmika👑😇 (@iamaathmika) on