விஜயை வைத்து அடுத்து அட்லி இயக்கப்போகும் புதிய படம் தொடர்பான கதை விவாதத்திற்கே அட்லி கொடுத்த பில் தயாரிப்பு நிறுவனத்திற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

ராஜாராணி படத்தில் தொடங்கி விஜயை வைத்து தெறி, மெர்சல் என 2 மெகா பட்ஜெட் படங்களை இயக்கி, தமிழ் சினிமா துறையில் பெரிய இயக்குனர்கள் வரிசையில் அட்லி இணைந்துள்ளார்.

சர்கார் படத்திற்கு பின் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை விஜய் அட்லிக்கே வழங்கியுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்க இப்படம் பிரம்மாண்ட செலவில் தயாராகிறது. இப்படத்திற்காக நயன்தாராவுக்கு ரூ.6 கோடி சம்பளம் பேசப்பட்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் கதை விவாதத்திற்கு ரூ. 1 கோடி வேண்டும் என தயாரிப்பு நிறுவனத்திடம் அட்லி கேட்டுள்ளாராம். நான் எந்த ஹோட்டலில், எந்த ஊரில் கதை விவாதம் செய்வேன் என்றெல்லாம் கேட்காதீர்கள். ஒரு கோடி கொடுத்து விடுங்கள். நான் கதையோடு வருகிறேன் என அட்லி கூறி விட்டாராம்.

அட்லியின் குருவும், பிரம்மாண்ட இயக்குனருமான ஷங்கரே கதை விவாதத்தை தனது அலுவலகத்தில் முடித்து விடுகிறார். அட்லியின் பந்தாவிற்கு அளவே இல்லை என கோடம்பாக்கத்தில் பேசிக்கொள்கிறார்களாம்.