விஜய் 63 கதை என்னுடையது என குறும்பட இயக்குனர் ஒருவர் அட்லியை சந்தித்து பேசிய விவகாரம் வெளியே கசிந்துள்ளது.

நடிகர் விஜயை வைத்து தெறி மற்றும் மெர்சல படங்களை இயக்கிய அட்லி, மீண்டும் விஜயை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிப்பார் எனத்தெரிகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 20ம் தேதி தொடங்கவுள்ளது. இப்படத்தின் கதை விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  துபாயில் விஜய்-அட்லி: 'தளபதி 63' கதை விவாதமா?

இந்நிலையில், சமீபத்தில் அட்லீயை நேரில் சந்தித்த ஒரு குறும்பட இயக்குனர் நீங்கள் இயக்கப்போகும் கதை என்னுடையது எனக்கூறி, தான் எடுக்கப்போகும் கதையை முழுவதுமாக கூற, இரு கதைகளும் ஒரே மாதிரி இருக்க, அட்லீ ஆடிப்போய்விட்டாராம். அதன்பின் நீங்கள் படம் இயக்க நானே வாய்ப்பு வாங்கி தருகிறேன். ஏதும் பிரச்சனை செய்து விடாதீர்கள் என சமாதானம் செய்து அவரை அனுப்பி வைத்ததாக வெளியே செய்தி கசிந்துள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் அடுத்த அவதாரம்......

வழக்கமாக இதற்கு முன் வந்த வெற்றிப்படங்களின் கதையை உருவி அதில் சிலவற்றை சேர்த்து அட்லீ புதிய படம் எடுப்பார் என சமூக வலைத்தளங்களில் அவரை வச்சு செய்து வருகின்றனர். ஆனால், விஜய் 63 படம் தொடங்கப்படும் முன்பே கதை என்னுடையது என ஒருவர் வந்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  ரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்?

அந்த குறும்பட இயக்குனர் எப்போது பிரச்சனையை கிளப்புவாரோ? இது எங்கு போய் முடியுமோ? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.