இயக்குனர் மணிரத்னம் இயக்கிய திரைப்படம் மெளனராகம் ராஜா ராணி என்ற பெயரில் அச்சு அசலாக அந்த படத்தை நவீன வடிவத்தில் எடுத்திருந்தார் அட்லி. சின்ன சின்ன மாறுதல்களை தவிர. இதே போல் விஜயகாந்த் நடித்த சத்ரியன் திரைப்படம் தெறியாக வந்தது.

அது போல் இவர் இயக்கிய மெர்சல் திரைப்படம் பல பழைய படங்களின் ஒட்டும்மொத்த கலவை என புகார் வந்தது. அபூர்வ சகோதரர்களில் தொடங்கி மூன்று முகம் என பல படங்களின் கதைகளை டச் செய்திருந்தார் அட்லி.

இதையும் படிங்க பாஸ்-  கஜினிகாந்த் டீம் அறிவித்துள்ள படம் என்ன கண்டுபிடிங்க புதிர்போட்டி

மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள், உரிமை பெற்றவர்கள் எதுவும் சொல்லாமல் இருந்த நிலையில் மூன்று முகம் படத்தை தயாரித்த சத்யா மூவிஸ் ஆர்.எம் வீரப்பனிடம் இருந்து அந்த படத்தின் உரிமை பெற்றவர் பைவ்ஸ்டார் கதிரேசன் என்பவர். இவர் தயாரிப்பாளர் சங்கத்தில் இது குறித்து புகார் அளிக்க, ஒரு வருட விசாரணைக்குப்பின் அட்லி அவரின் சம்பளத்தில் இருந்து 4 கோடியை பைவ் ஸ்டார் கதிரேசனுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது தயாரிப்பாளர் சங்கம்.

இதையும் படிங்க பாஸ்-  அட்லி, பிரியா, கதிருடன் சேர்ந்து படம் பார்த்த கீர்த்தி சுரேஷ்

இதை அட்லி ஏற்றுக்கொள்ளவில்லை இது முழுக்க எனது கற்பனையில் உருவான படம்தான் என்று சொன்னதாகவும் , அதை ஏற்றுக்கொள்ளாத தயாரிப்பாளர் சங்கம் ஒரு இயக்குனர் குழுவை வைத்து படத்தை பார்க்க வைக்கவும் எந்தெந்த காட்சிகள் காப்பியடிக்கப்பட்டுள்ளது என அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.

இதையும் படிங்க பாஸ்-  விஜய் 63: இந்துஜாவுக்கு என்ன வேடம் தெரியுமா?

மேலும் அட்லி அதையும் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அட்லியை வைத்து தயாரிப்பாளர்கள் படம் இயக்கவும் தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டது.

இது எதையும் ஏற்றுக்கொள்ளாத அட்லி முடிந்தால் நீதிமன்றம் செல்கிறேன் அங்கு சொல்லும் தீர்ப்புக்கு கட்டுப்படுவேன் என்று சொல்லி இருக்கிறார். மேலும் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்த ஜிகர்தண்டா படம் கொரிய படத்தின் காப்பி என்று அதை ஒரு பிரச்சினையாக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.