நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படம் நேற்று முன் தினம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மெரினா படம் மூலம் திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் தனது திறமையான நடிப்பின் மூலம் முன்னணி நடிகராக வளர்ந்திருக்கிறார்.

அவரின் ஆரம்ப கால படங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறி அதிகமான ஸ்டைல், பில்டப் காட்சிகள் வர வர சிவகார்த்திகேயனின் படங்களில் அதிகமாகி கொண்டே வருகின்றன. மாஸ் ஹீரோவுக்கான அடையாளமாகவும் இது போன்ற செயல்கள் பார்க்கப்படுகிறது.

சீமராஜாவிலும் ஓப்பனிங் சாங், மல்யுத்தம் , காலை மிதித்தவுடன் ஆயுதம் கையில் வருவது போன்ற பில்டப் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் இல்லை.

சீமராஜா படமும் பல படங்களில் இருந்து மாஸ் காட்சிகள் எடுத்து சிவகார்த்திகேயனுக்காக சேர்க்கப்பட்டுள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இதை நெட்டிசன்கள் இவ்வாறு கலாய்த்து வருகின்றனர்.

முதல் பைட்ல முத்து ரஜினிய பார்த்தேன்

மல்யுத்த பைட்ல மெர்சல் விஜய பார்த்தேன்

அரசர் கால காட்சியில பாகுபலி பிரபாஸ் பார்த்தேன் என்று சொல்ல அட மொத்தத்தில் அட்லி படம் பார்த்தேன்னு சொல்லு என அட்லியை வம்புக்கு இழுக்கிறார்கள்.

அட்லியின் படங்கள் ஏதாவது படத்தின் காப்பி என்பதும் ஒவ்வொரு காட்சியும் வேறு வேறு படங்களில் சுடப்பட்டு பில்டப் செய்யபடும் என்பதும் அட்லி மீது நீண்ட நாளாக கூறப்படும் விமர்சனமாகும்.