‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்
அட்லி. இவர் இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக
பணியாற்றியவர்.

‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’ என தொடர்ச்சியாக
வெற்றிப்படங்களை இயக்கியுள்ள அட்லி இன்று தனது பிறந்த
நாளை கொண்டாடி வருகிறார்.

அவருக்கு திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும்
தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வண்ணம் உள்ளன.

இதையும் படிங்க பாஸ்-  'சைமா' 2018 'மெர்சல்' திரைப்படத்திற்கு 5 விருதுகள்

இந்நிலையில் அவருடைய மனைவியும் நடிகையுமான ப்ரியா ,
ட்விட்டர் பக்கத்தில் தனது காதல் கணவருக்கு பிரியமுடன்
வாழ்த்து கூறியுள்ளார்.

அதில், “உங்களிடமுள்ள அனைத்து விஷயங்களையும் நான்
வியக்கிறேன். உங்களை விடவும் ஒரு சிறந்த நண்பன்
கிடையாது. உங்களை விடவும் ஒரு சிறந்த கணவர் கிடையாது.
உங்களை விடவும் ஒரு சிறந்த மகன் கிடையாது. உங்களை
விடவும் ஒரு சிறந்த மருமகன் கிடையாது. நான் வியக்கும்
மனிதருடன் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டு அவருடன்
இருப்பதை ஆசிர்வாதமாகக் கருதுகிறேன். என் அனைத்துமாக
உள்ளவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்’’ என்று
கூறியுள்ளார்.