தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான தமன்னா ஹைத்ராபாத்தில் உள்ள நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்றிருந்த போது அவா் மீது பட்டதாரி வாலிபா் ஒருவா் செருப்பு எறிந்துள்ளார்.

தமன்னா தமிழில் பையா, அயன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்த ஸ்கெட்ச் படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இவா் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். இன்று ஹைதரபாத்தில் உள்ள ஒருபுதிய நகைக்கடையை திறக்க அவா் சென்றிருந்தார். அவரை பார்ப்பதற்கென்று மக்கள் வெள்ளம் கடலென திரண்டிருந்தது. தமன்னா சில ரசிகா்களோடு செல்ஃபி எடுத்துக்கொண்டார். அப்போது கூட்டத்தில் இருந்து ரசிகா் ஒருவா் தமன்னா மீது செருப்பு ஒன்று எறிந்துள்ளார்.

அந்த செருப்பு நடிகை தமன்னா மீது படாமல் பக்கலிருந்து பாதுகாவலா் மீது விழுந்துள்ளது. உடனே சுதாரித்துக் கொண்ட பாதுகாவலா்கள் அவ்வளவு பெரிய கூட்டத்தில் யார் செருப்பு இல்லாமல் இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து அந்த நபரை பிடித்துள்ளனார்.

அந்த வாலிபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா் போலீசார். அந்த விசாரணையில் அவரது பெயா் கரிமுல்லா வயது (31). அவா் ஒரு பொறியியல் பட்டதாரி. அவா் நடிகை தமன்னாவின் தீவிர ரசிகா் என்றும் கூறியதோடு, தெலுங்கில் அவரது படங்கள் எதுவும் சரியில்லாத காரணத்தால், அந்த விரக்தியில் தமன்னா மீது செருப்பு எறிந்ததாக தெரிவித்துள்ளார்.