வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் ஆகிய இரு படங்களின்  வெற்றியைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார்

இப்படத்தை சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் ஆர்.டி ராஜா தயாரித்துள்ளார்

இமான் இசையமைத்துள்ளதால் இப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தின் கதாநாயகியாக சமந்தா நடித்துள்ளார்,கீர்த்திசுரேசும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். டி.இமான் இசையமைக்கிறார்

இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை மதுரையில் நடத்த முடிவாகி வரும் ஆகஸ்ட் 3ம் தேதி நடத்த முடிவெடுத்துள்ளது படக்குழு .இயக்குனர் பொன்ராம், நடிகர் சிவகார்த்திகேயன் போன்றோர் தென்மாவட்டங்களை சார்ந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கும் என யூகிக்க முடிகிறது பெரும்பாலும் படங்களின் இசை வெளியீட்டு விழா சென்னையில்தான் நடக்கும்.

இது மதுரையில் வித்தியாசமாக நடக்கவிருப்பதால் இசை வெளியீட்டு விழாவுக்கே ரசிகர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.