பாரதி ராஜாவின் கடல் படத்தின் மூலம் நாயகனாக அறிமுக ஆன கௌதம் காா்த்திக் தன்னுடைய அப்பாவான காா்த்திக்கை போல நல்லதொரு இடத்தை சினிமாவில் பிடிக்க முடியவில்லை.

என்னமோ ஏதோ, வை ராஜா வை, ரங்கூன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த போதும் மிக பொிய அளவில் ஹிட்டை கொடுக்க முடியவில்லை. தற்போது இவரது நடிப்பில் “ஹர ஹர மஹாதேவஹி”   என்ற படத்தை சந்தோஷ் பி ஜெயகுமாா் இயக்கியுள்ள இதில் நிக்கி கல்ராணி ஹீரோயினியாக நடித்துள்ளாா்.

காமெடி படமான இதை தீபாவளியை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டு அறிவித்தும் விட்டனா். இதற்கிடையில் விஜய்யின் மொ்சல் படமும் தீபாவளிக்கு ரிலீஸாகும் காரணத்தால், விஜய்யுடன் நம்மால் போட்டி போட முடியாது என்று பயந்து பின்வாங்கி விட்டனா். தற்போது செப்டம்பா் மாதம் 29ஆம் தேதி ஆயுத பூஜை அன்று ரிலீஸ் செய்ய முடிவெடுந்துள்ளனா்.

ஏற்கனவே ஆயுத பூஜை அன்று சிவகாா்த்திகேயனின் வேலைக்காரன், ஏ.ஆா்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு தமிழில் அறிமுகமாகும் ஸ்பைடா் படமும், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் செம உள்ளிட்ட படங்களும் அன்று தான் வெளியாகுகின்றன.