ஆசிரியர்: நெல்லை நேசன்

இவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com
அனிருத் ஒத்து வந்த பாக்கலாம் – எதை சொல்கிறார் தனுஷ்?

அனிருத் ஒத்து வந்த பாக்கலாம் – எதை சொல்கிறார் தனுஷ்?

சற்றுமுன், செய்திகள்
தன்னுடய படத்திற்கு அனிருத்தின் இசை தேவைப்பட்டால் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். தனுஷ் நடித்த 3, மாரி, வேலை இல்லா பட்டதாரி ஆகிய படங்களுக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்தார். இந்த படங்களில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல் தனுஷ் தயாரித்த எதிர் நீச்சல், நானும் ரவுடிதான் ஆகிய படங்களுக்கும் அனிருத்தே இசையமைத்தார். அந்தப் படங்களிலும் இடம் பெற்ற பாடல்களும் ஹிட் ஆகின. ஆனால், ஏதோ காரணத்தால் அனிருத்திடமிருந்து பிரிந்த தனுஷ், தனது வேலை இல்லா பட்டதாரி 2 படத்தில் வேறொரு இசையமைப்பாளரை பயன்படுத்தினார். அதேபோல், அவர் இயக்கிய பவர் பாண்டி படத்திலும் அனிருத் இசையமைக்கவில்லை. எனவே, அவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது. இதுபற்றி சமீபத்தில் தனுஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய தனுஷ் “ அனிருத் மிகவும்
எனக்கு அவருக்கும் அது ஒரே மாதிரி இருக்கு – கிளுகிளுப்பாக பேசிய சானியா

எனக்கு அவருக்கும் அது ஒரே மாதிரி இருக்கு – கிளுகிளுப்பாக பேசிய சானியா

சற்றுமுன், செய்திகள்
பாலிவுட் நடிகை பிரணீதா சோப்ரா சமீபத்தில் அளித்த கிளு கிளு பேட்டி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிடம் ஒரு செய்தியாளர் ஒரு கேள்வி கேட்டுள்ளார். அதவது,  அவருடைய கதையை சினிமாவாக எடுத்தால் எந்த நடிகை நடித்தால் பொருத்தமாக இருக்கும் எனக் கேட்க,  அவர் பிரணிதா சோப்ரா நடித்தால் சரியாக இருக்கும் என என் பெயரை கூறியிருக்கிறார். அதன் பின் ஒரு நாள் அதிகாலை 2 மணியளவில் அமெரிக்காவிலிருந்து சானியா மிர்சா என்னை தொலைப்பேசியில் அழைத்தார்.  நீ என்னைப் போலவே இருக்கிறாய். அதோடு, உனக்கும் எனக்கும் மார்பு ஒரே மாதிரி இருக்கிறது. அது இறைவன் நமக்கு அளித்த பரிசு. அதனால்தன் உன் பெயரை கூறிவிட்டேன்” எனக் கூறினார். அது கேட்டு நான் சிரித்தேன். அந்த சம்பவத்திற்கு பின்  நாங்கள் நல்ல நண்பர்களாக மாறிவிட்டோம் என பிரணிதா சோப்ரா
அல்வா வாசுவிற்கு அஞ்சலி செலுத்தக்கூட செல்லாத வடிவேலு….

அல்வா வாசுவிற்கு அஞ்சலி செலுத்தக்கூட செல்லாத வடிவேலு….

சற்றுமுன், செய்திகள்
உடல் நலக்குறைவால் சமீபத்தில் மரணமடைந்த நடிகர் அல்வா வாசுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சொற்ப சினிமாக்காரர்களே சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் மணிவண்ணனிடம் உதவியாளராக தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகர் அல்வா வாசு. அதன் பின் மணிவண்ணன் இயக்கிய படங்கள், குறிப்பாக சத்தியராஜ், வடிவேலு நடித்த பல படங்களில் அல்வா வாசு நடித்துள்ளார். இதுவரை 900க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. அந்நிலையில், கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த 6 மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்த அவர் கடந்த 17ம் தேதி மரணமடைந்தார்.  இதில் என்ன துயரம் என்னவெனில், அவருடன் இணைந்து நடித்த பல காமெடி நடிகர்கள் மற்றும் பெரிய நடிகர்கள் எவரும் அவருக்கு அஞ்சலி செலுத்த செல்லவில்லையாம். நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விக்னேஷ் மட்டும் சென்றிருக்கிறார். அது போக, விரல் விட்டு எண்ணக்கூடிய சில சிறு
ஆஸ்கர் விருது நிச்சயம்: விவேகம் டிரைலரை கிண்டலடித்தாரா ஆர்த்தி?

ஆஸ்கர் விருது நிச்சயம்: விவேகம் டிரைலரை கிண்டலடித்தாரா ஆர்த்தி?

சற்றுமுன், செய்திகள்
அஜித் நடிப்பில் அடுத்த வாரம் வெளியாக உள்ள படம் விவேகம். சிவா இயக்கத்தில் காஜல்,கருணாகரன்,விவேக ஓபராய் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் நேற்று விவேகம் படத்தின் டிரைலர் வெளியானது. ரசிகர்கலின் ஏகோபித்த வரவேற்பில் யூடியூபில் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் விவேக டிரைலரை பார்த்த நடிகை ஆர்த்தி 57 முறை பார்த்தேன்...விஷுவல்ஸ் வேற வெவல்..படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். ஆஸ்கர் விருது பெற தயாராகுங்கள்...பெருமைப்படும் ரசிகை என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ரசிகர் ஒருவர் ஆமாம் கண்டிப்பாக ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று கிண்டலடித்துள்ளார். ஆர்த்தியின் இந்த டுவிட்டர் பதிவு விவேகத்தை கிண்டலடித்துள்ளாரா? இல்லை பாராட்டியுள்ளாரா என ரசிகர்கள் குழம்பித்தான் போய் உள்ளனர்.
பிக்பாஸ் வீட்டிற்கு போகிறாரா நந்திதா சுவேதா?

பிக்பாஸ் வீட்டிற்கு போகிறாரா நந்திதா சுவேதா?

சற்றுமுன், சின்னத்திரை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை நந்திதா சுவேதா கலந்து கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நடவடிக்கைகள் மூலம் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்த ஓவியா, ஆரவ் மீது கொண்ட காதல் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலைக்கு முயன்று, நிகழ்ச்சியிலிருந்தும் வெளியேறிவிட்டார். ஆனால், அவரில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியை இனிமேல் பார்க்க மாட்டோம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்நிலையில், நடிகர் சுஜா வருணி நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். இன்று நடிகர் ஹரீஸ் கல்யாண் சென்றார். மேலும், நடிகை நந்திதா சுவேதாவும் பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறார் என செய்திகள் வெளியானது. இந்நிலையில் இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் பதில் கூறியுள்ள நந்திதா “ நான் பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறேனா என ஏராளமான மெசேஜ் மற்றும் தொலைப்பேசி அழைப்புகள் வந்துள்ளது. ஆனால், என்னுடைய பதில் ‘இல்லை’
அஜீத் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி – இயக்குனர் சிவா டிவிட்

அஜீத் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி – இயக்குனர் சிவா டிவிட்

சற்றுமுன், செய்திகள்
நடிகர் அஜீத் எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு கண்காட்சியாக சென்னையில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜீத் நடிகர் என்பதையும் தாண்டி ஒரு புகைப்படக் கலைஞர் என்பது சிலருக்கு மட்டுமே தெரியும். சினிமா படப்பிடிப்பிறக எந்த ஊருக்கு மற்றும் நாட்டிற்கு சென்றாலும் தன்னுடன் ஒரு கேமராவை எடுத்துக்கொண்டுதான் அவர் செல்வார். அங்கு அவருக்கு பிடித்த இடங்களை அவர் கேமராவில் புகைப்படம் எடுப்பார். அப்படி அவர் அடுத்த புகைப்படங்களின் தொகுப்பை சென்னை, டிடிகே சாலையில் உள்ள ஃபோக்கஸ் ஆர்ட் கேலரி என்ற ஐடத்தில் மக்களின் பார்வைக்காக வைத்துள்ளனர். விவேகம் படத்தின் இயக்குனர் சிவா இன்று அங்கு சென்று அந்த புகைப்படங்களை பார்வையிட்டார். அதன் பின், அதுபற்றி  தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர் “அஜீத் சார் ஒரு தேர்ந்த புகைப்பட கலைஞராக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். அனைத்து அஜீத
பிரபல காமெடி நடிகர் அல்வா வாசு காலமானார்

பிரபல காமெடி நடிகர் அல்வா வாசு காலமானார்

சற்றுமுன், செய்திகள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கலக்கிய இவா் கல்லீரல் பாதிப்பால் சுமாா் 6 மாதங்களுக்கு மேலாக அவதிப்பட்டு வந்தவா் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளாா். மருத்துவா்கள் அவரது மனைவியிடம் அவரது உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது. சிகிச்சையும் பலன் அளிக்கவில்லை, விரைவில் அவரது உயிா் பிாிந்துவிடும் என்று கைவிாித்து விட்டனா். அதனால் அவரை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்றும் கூறிவிட்டனா்.. இந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். இவா் மறைந்த இயக்குநா் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியவா். இவருக்கு கிருஷ்ண ஜெயந்திக்கா என்ற மகள் உள்ளாா். தமிழில் 900 படங்களுக்கு மேல்பட்ட திரைப்படங்களில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளாா் அல்வா வாசு. அமைதிப்படை, அருணாச்சலம், சிவாஜி உள்ளிட்ட படங்களிலும், நடிகா் வடிவேலுடன் இவா் நடித்த காமெட
பிக்பாஸில் புது வரவு – யார் இந்த ஹரீஸ் கல்யாண்?

பிக்பாஸில் புது வரவு – யார் இந்த ஹரீஸ் கல்யாண்?

சற்றுமுன், செய்திகள்
பிக்பாஸ் வீட்டிற்கு புதிய நபராக நடிகர் ஹரீஸ் கல்யாண் எண்ட்ரி கொடுத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா சென்ற பின், அந்த நிகழ்ச்சி களையிழந்து காணப்படுகிறது. அதனால், நேற்று நடிகை சுஜா வருணியை மேள தாளத்துடன் உள்ளே அனுப்பினர். அவரால் என்ன நடக்கப்போகிறது என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இன்று நடிகர் ஹரீஸ் கல்யாணை உள்ளே அனுப்பியுள்ளனர். அதுவும் அவர் சுவர் வழியாக வீட்டின் உள்ளே குதித்து எண்ட்ரி கொடுத்தார். இவர் இயக்குனர் சாமி இயக்கிய சிந்து சமவெளி படம் மூலம் 2010ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அந்த படம் சர்ச்சையை கிளப்பியதே தவிர பாக்ஸ் ஆபீசில் ஹிட் அடிக்கவில்லை. அதன்பின் ஹரீஸ் இயக்குனர் எஸ்.ஏ.சந்தரசேகர் இயக்கிய ‘சட்டப்படி குற்றம்’ படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்தார். அந்தப் படமும் வெற்றியடையவில்லை.  சிறு சிறு வேடங்களில் சில படங்கள் நடித்தார். ஆனால், 2014ம் ஆண்ட
உதயநிதியை பின்னுக்கு தள்ளிய அருள்நிதி

உதயநிதியை பின்னுக்கு தள்ளிய அருள்நிதி

சற்றுமுன், செய்திகள்
  உதயநிதி ஸ்டாலின் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் இதுவரை முழு அரசியல் படத்தில் நடித்ததில்லை. சரவனன் இருக்க பயமேன், பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களில் அரசியலை காமெடியாக கையாண்டிருப்பார். அந்த வகையில் அருள்நிதி உதயநிதியை தாண்டிவிட்டார் என்றே சொல்லலாம். அருள்நிதி தற்போது கரு. பழனியப்பன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் கதையம்சம் உள்ள கதையாம். குறிப்பாக தற்போதைய அரசியலை தாக்கி கதை அமைக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தை மரகத நாணயம் படத்தை தயாரித்த டில்லி பாபு தயாரிக்கிறார்.