ஆசிரியர்: s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com
அருவா சண்ட படத்தின் டீசா்

அருவா சண்ட படத்தின் டீசா்

சற்றுமுன், செய்திகள், வீடியோ
இயக்குநா்அமீா் அருவா சண்ட படத்தின் டீசரை வெளியிட்டார். இந்த படத்தில் புதுமுகம் ராஜா ஹீரோவாக அறிமுகமாகிறார். இயக்குநா் ஆதிராஜன் சிலந்தி, ரணதந்தரா படங்களை தொடா்ந்து எழுதி இயக்கும் படம் தான் அருவா சண்டை. மேலும் இதில் மாளவிகா மேனன், சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, சௌந்தர்ராஜா, காதல் சுகுமார், விஜய் டிவி சரத், மதுரை சுஜாதா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனா். இந்த படத்திற்குசந்தோஸ் பாண்டி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தின் கதைக்களம் என்னவென்றால காதல் சண்டையையும், கபடிச் சண்டையையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத தரண் இசையமைத்துள்ளார். அருவா சண்டை படத்தின் டீசரை வெளியிட்ட அமீா், டீசா் நன்றாக இருக்கிறது. படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்று பாராட்டினார். இந்த படத்தை ஒயிட் ஸ்கிரின் நிறுவனம் சார்பில் வி ராஜா தயாரித்திருக்கிறார்.  
அஜித் ரசிகர்கள் சிவாவிற்கு போட்ட கட்டளை

அஜித் ரசிகர்கள் சிவாவிற்கு போட்ட கட்டளை

சற்றுமுன், செய்திகள்
தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். சினிமாவின் தைரியமான முடிவுகளை மிகவும் துணிச்சலாக எடுப்பவர்.அஜித்தை எத்தனை சிவா படங்களில் வேண்டுமானாலும் நடிக்கசொல்லுங்கள், ஆனால், கேப் வேண்டும் என்று கடந்த வாரம் பலரும் கூறினார்கள், ஆனால், இது அஜித் காதுகளுக்கு சென்றதா? என்று தெரியவில்லை. சரி, ஒரு சில ரசிகர்கள் மனதை தேற்றிக்கொண்டு சிவாவிடம் ஒரு சில கோரிக்கைகளை வைத்துள்ளனர், அதவாது சிவா கடைப்பிடிப்பாரா? இல்லை தல கேட்பாரா? பார்ப்போம். இதில் முக்கியமாக இனி சால்ட் & பெப்பர் லுக்கே வேண்டாம், பார்த்து மிகவும் போர் அடித்துவிட்டது, தயவு செய்து அதை மாற்றுங்கள் என்று கேட்டுள்ளனர். இதை தொடர்ந்து ஹீரோவிற்கு ஓவர் மாஸ் வசனங்கள் வேண்டாம், குறிப்பாக ஹீரோவை புகழும் வில்லன் வேண்டாவே வேண்டாம். அதேபோல் படத்தில் செண்டிமெண்ட் காட்சிகள் அவசியம் தான், ஆனால், ஒ
திருமதி டிடி மீண்டும் செல்வி ஆகிறார் அதிர வைக்கும் காரணம் இதோ

திருமதி டிடி மீண்டும் செல்வி ஆகிறார் அதிர வைக்கும் காரணம் இதோ

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
      தொகுப்பாளினி என்றவுடன் நம் நினைவிற்கு வருவது திவ்ய தர்ஷினி தான்.தற்போது அவர் தனது கணவரை விவகரத்து செய்ய போவதாக சமீப காலமாக தகவல் பரவி வருகிறது.இது உண்மைதான் என்று நிரூபிக்கும் வகையில் அவர் நடித்த பவர் பாண்டி படத்தில் அவர் பெயருக்கு முன்னாள் திருமதி என குறிப்பிடாமல் செல்வி என குறிப்பிட்டிருந்தார். இதனால் பல ஊடகங்கள் திவ்ய தர்ஷினியிடம் ஏன் செல்வி என குறிப்பிட்டு இருக்கீங்க என கேட்டபோது அதற்கு அவர் பதில் கூறவில்லை. இந்நிலையில் அவரது காதல் கணவரை பிரிவதற்கு என்ன காரணம் என்பது வெளியாகியுள்ளது.       இப்பொழுது இவருக்கு 34 வயது ஆவதால் அவர் புகுந்த வீட்டில் குழந்தை பெற்றுகொள்ள சொல்லி வற்புறுத்துகின்றனர். ஆனால் திவ்ய தர்ஷினி முன்னணி தொகுப்பாளினியாக இருப்பதால் என்னால் குழந்தை பெற்றுகொள்ள முடியாது என சொல்லிவிட்டார். திவ்ய தர்ஷினி அதிக ஆண்
அமிதாப் பச்சனுக்கு டான்ஸ் கற்றுத் தருகிறாரா பிரபு தேவா?

அமிதாப் பச்சனுக்கு டான்ஸ் கற்றுத் தருகிறாரா பிரபு தேவா?

சற்றுமுன், செய்திகள்
              பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா, பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனுடன் ஒரு பாடலுக்கு டான்ஸ் மாஸ்டராக இணைகிறார்.இந்த 75 வயதில் கால்களை அசைத்து ஆடுவதில் சிரமம் உள்ளது என்று அமிதாப் கூறியுள்ளார்.இது குறித்து அமிதாப் பச்சன் தனது டுவிட்டரில் கிண்டலாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.கடந்த ஞாயிறு அன்று தன்னுடைய புகைப்படம் ஒன்றைப் பதிவேற்றி அமிதாப் கூறியது, ‘இந்த 75 வயதில் நான் டான்ஸ் ஆட வேண்டும்...அதுவும் ஜீனியஸான பிரபு தேவா இயக்கத்தில்... வேறு எந்த புகழிடமும் இல்லாமல் இன்னும் வீட்டில் தான் இருக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.       அமிதாப் இந்த புதிய படத்தை பற்றி வேறு எந்த தகவல்களையும் பகிரவில்லை.தற்போது அமிதாப் ‘கோன் பனேகா க்ரோர்பதி’என்ற புதிய கேம் ஷோவிலும்,102 நாட் அவுட் மற்றும் தக்ஸ் ஆஃப் இ
கிளாமராக நடிக்க மாட்டேன்! பிரியா பவானி ஷங்கர்

கிளாமராக நடிக்க மாட்டேன்! பிரியா பவானி ஷங்கர்

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
       சிரீயல் இருந்து சினிமா வந்த நடிகைகளில் சமீபத்திய வரவு பிரியா பவானி ஷங்கர். கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்த பிரியா, மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவிலும் ரசிகர்களின் மனதில் இடம் பெற்றார். மிகையில்லாத இயல்பான நடிப்பும், அழகான சிரிப்பும் இவரது ப்ளஸ் பாயிண்ட்.மேயாத மான் பட வாய்ப்பினைத் தொடர்ந்து பிரியாவுக்கு படவாய்ப்புகள் நிறைய வருகிறதாம். ஆனால் நல்ல கதாபாத்திரங்களாகத் தேர்ந்தெடுத்து நடிக்கவிருப்பதாக பிரியா பவானி ஷங்கர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.       பெண்களை கொச்சைப்படுத்தும் படங்களிலும், ஹீரோயினை செட் ப்ராபர்ட்டி போலப் பயன்படுத்தும் படங்களில் நடிக்க மாட்டேன், நான் ஒரு ஹீரோயின் மெட்டிரியல் கிடையாது என்றும் கூறியிருக்கிறார். மேலும் க்ளாமராக நிச்சயம் நடிக்க மாட்டேன் என்றும் கூறினார
ஜோடி சேரும் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண், ரைசா

ஜோடி சேரும் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண், ரைசா

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
      தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் தற்போது சினிமாவில் வாய்ப்பு குவிந்து வருகிறது. ஓவியா, ஆரவ் உள்ளிட்டோர் படம் கமிட் ஆகி பிசியாகிவிட்டனர். இந்நிலையில் தற்போது ‘பொறியாளன்’, ‘வில் அம்பு’ முதலான படங்களில் நடித்திருப்பவரும், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டவருமான ஹரிஷ் கல்யாண் அடுத்து ‘கிரகணம்’ படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படம் ரொமான்டிக் காமெடி படமாக உருவாகவிருக்கிறது.       இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும், ‘வேலையில்லா பட்டதாரி–2’ படத்தில் நடித்தவருமான ரைசா கதாநாயகியாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நவம்பர் 5-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதனை தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.
கலா மாஸ்டர் நிகழ்ச்சியின் தொகுப்பாளினி ஜூலியா?

கலா மாஸ்டர் நிகழ்ச்சியின் தொகுப்பாளினி ஜூலியா?

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
      பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பலரின் கோபத்திற்கு ஆளானவர் ஜுலி. வீர தமிழச்சி என்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பாராட்டப்பட்ட இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் வெறுப்பை சம்பாதித்துவிட்டார்.ஆனால் ஜூலியின் தன்னம்பிக்கையை அனைவரும் பாரட்டி தான் ஆக வேண்டும். எது எப்படி இருந்தாலும் ஜூலிக்கு கிடைக்க வேண்டியது கிடைத்து கொண்டு தான் இருக்கிறது.       இவர் அடுத்த என்ன செய்ய போகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் ஜுலி கலைஞர் தொலைக்காட்சியில் ஓடி விளையாடு பாப்பா சீசன் ஆறு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமிட்டாகியுள்ளார்.திங்கள் முதல் வெள்ளி வரை அவரது ஷோ ஒளிபரப்பாக இருக்கிறதாம். ஜுலி தொகுத்து வழங்க இருக்கும் அந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக கலா மாஸ்டர் மற்றும் நடிகர் கோகுல் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
கருணாநிதி தனது கொள்ளு பேரன் திருமணத்தை நடத்தி வைத்தார்

கருணாநிதி தனது கொள்ளு பேரன் திருமணத்தை நடத்தி வைத்தார்

சற்றுமுன், செய்திகள்
      நடிகர் விக்ரம்- சைலஜா தம்பதியின் மகள் அக்‌ஷிதாவுக்கும், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து- சிவகாம சுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவனத்தலைவர் சி.கே. ரங்கநாதன்-தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும்,கடந்த ஜூலை 10ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.சில மாதங்களுக்கு பிறகு இவர்களின் திருமணம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டில் இன்று காலை நடைபெற்றது.                            திருமணத்தில் கருணாநிதி மற்றும் நடிகர் விக்ரம் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். காலை 9.50 மணியளவில் மணமகள் அக்‌ஷிதாவை கோபாலபுரம் இல்லத்துக்கு நடிகர் விக்ரம் கா
‘இசைக்குயில்’ யின் இசைப்பயணம் முடிவடைந்தது…!

‘இசைக்குயில்’ யின் இசைப்பயணம் முடிவடைந்தது…!

சற்றுமுன், செய்திகள்
     இசைக்குயில் என புகழப்படுபவர் பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட 17 மொழிகளில் 48000 பாடல்களை பாடி உள்ளார்.1952-ல் பாட தொடங்கிய எஸ்.ஜானகியின் இசைப் பயணம் மிக நெடியது. மிகவும் இனிமையான எஸ்.ஜானகியின் குரல் ஒலிக்க தொடங்கிவிட்டால் இன்னிசை பாடும் குயில் கூட தனது கானத்தை சற்று நிறுத்திவிட்டு அவரது பாடலை ரசிக்கும் என்று ரசிகர்களால் புகழப்படுபவர்.      கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே எஸ்.ஜானகி திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துவிட்டார். மேலும் மேடை கச்சேரிகளையும் வெகுவாக குறைத்துக் கொண்டார். இந்த நிலையில் மைசூரில் வசித்து வரும் கேரள தொழில் அதிபரும் எஸ்.ஜானகியின் ரசிகருமான மனுமேனன் எஸ்.ஜானகியின் கச்சேரியை மைசூரில் நடத்த ஏற்பாடு செய்தார்.      இதைதொடர்ந்து நேற்று மைசூரின
பாகுபலி விருந்தில் என்ன உணவு ஸ்பெஷல் தெரியுமா?

பாகுபலி விருந்தில் என்ன உணவு ஸ்பெஷல் தெரியுமா?

சற்றுமுன், செய்திகள்
      ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளிவந்து இந்தியா முழுவதிலும் பல சாதனைகளை படைத்த படம் பாகுபலி. வயது வித்தியாசம் இல்லாமல் சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவரையும் இந்தப் படம் கவர்ந்தது. பாகுபலி புடவை, பாகுபலி பட்டாசு, பாகுபலி பை, பாகுபலி குடை என வரிசையில் இப்போது பாகுபலி விருந்தும் இணைந்துள்ளது. ஆம், புனேவில் உள்ள ‘ஹவுஸ் ஆஃப் பராத்தா’ என்னும் கடையில் இந்த ‘பாகுபலி தாலி’ அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.       வட இந்திய உணவுப் பொருளான பரோட்டாவில் பல ரகங்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. முக்கியமாக ‘கட்டப்பா பிரியாணி’, ‘தேவஸேனா பரோட்டா’, ‘பல்வாள்தேவா லஸி’, சிவகாமி ஷாஹி பாக்வான் மற்றும் பெரிய ‘பாகுபலி பரோட்டா’ போன்ற பல உணவு வகைகள் இதில் இருக்கின்றன. நடுவில் பீட்ஸாவில் போல் வைக்கப்பட்டு இருக்கும் இந்த பாகுபலி பரோட்டாவின் மேல் சீஸ் மற