ஆசிரியர்: மோகன ப்ரியா

இவர் 2 ஆண்டுகளாக சினிமா தளத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். பொழுதுபோக்கு செய்திகள் தருவதில் நல்ல அனுபவம் வாய்ந்தவர். சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கு பதிவுகளை உடனுக்குடன் செய்திகளாக உருவாக்கி தளத்தில் பதிவிட்டு வருகிறார். நகைச்சுவையான மீம்ஸ்கள் உள்ளிட்ட சில பிரிவுகளை இவர் கவனித்துவருகிறார். தொடர்புகொள்ள- moghnaselvaraj@gmail.com
எழுத்தாளராக நடிக்கும் சாந்தினி தமிழரசன் !!

எழுத்தாளராக நடிக்கும் சாந்தினி தமிழரசன் !!

சற்றுமுன், செய்திகள்
பாக்யராஜ் இயக்கத்தில்  சாந்தனுக்கு ஜோடியாக சித்து +12 படம் மூலம் அறிமுகமாகி பின் நகுலுடன் நான் ராஜாவாக போகிறேன், வில் அம்பு மற்றும் சில படங்களில் நடித்தவர் சாந்தினி தமிழரசன். தற்போது பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். தரணிதரன் தனது பர்மா பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கும் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தில் சாந்தினி எழுத்தாளராக நடிக்கிறார். ‘ரங்குஸ்கி’ என்பது பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் புனை பெயர். இந்த படத்தில் சாந்தினி ஒரு தைரியமான எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுவரை நடித்த கதாப்பாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இதில் நடிப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் மேலும் 'ராஜா ரங்குஸ்கி’ அனைவரும் விரும்பும் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
சமூக சேவைகளில் ஈடுபடும் – ரகுல் ப்ரீத் சிங்

சமூக சேவைகளில் ஈடுபடும் – ரகுல் ப்ரீத் சிங்

சற்றுமுன், செய்திகள்
  மாநிலங்களில் பல  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூக சேவைகளில் ஈடுபடுகின்றன. ஆந்திராவில் சில தொண்டு நிறுவனங்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலம் சொல்லித் தருவதற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றன. மாற்றமாக இருங்கள் மாற்றத்தை சொல்லித்தாருங்கள் என இந்த முகாமில் ரகுல் ப்ரீத் சிங் ஆங்கிலம் சொல்லித்தரும் ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கிறார் . மேலும் இவர் ஆங்கிலம் பேச தெரிந்திருத்தல், அவரின் ஈடுபாடு மற்றும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே அவர் தேர்வு செய்யப்பட்டார்  என தொண்டு அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஆங்கில பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. எனவே அங்கு சென்று மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். இந்த கல்வி ஆண்டு முழுவதும் பயிற்சியாளர்கள் அதில் பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள் என கூறப்படுகிறது.  
காமெடி காட்சிகளில்  கலக்கும் சமந்தா!!!

காமெடி காட்சிகளில் கலக்கும் சமந்தா!!!

சற்றுமுன், செய்திகள்
மித்ரன் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்து கொண்டிருக்கும் படம் இரும்புத்திரை. இந்த படத்தில் முதன்முறையாக பல காமெடி காட்சிகளில் அனைவரையும் சிரிக்க வைக்கும் வகையில் நடித்தது கொண்டிருக்கிறார். காமெடி காட்சிகளில் இவருடன் ரோபோ சங்கர் நடிக்கிறார். எனவே இருவர் இணைந்து நடித்திருக்கும் காமெடி காட்சிகள் திரையரங்குகளில் பெரிய கைத்தட்டல் கிடைக்கும் என எதிர்பார்க்க படுகிறது.  ஷூட்டிங் ஸ்பாட்டில் காமெடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்தது இனிமேல் தான் நடிக்கும் படங்களில் காமெடிக்கு முன்னுரிமை கொடுக்க போவதாக சொல்கிறார் சமந்தா. மேலும் அநீதி கதைகள் , விஜயின்-61  மற்றும் மகாநிதி என பல படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.
பத்து மாதங்களில் முறிந்துபோன ஆச்சியின் திருமண வாழ்க்கை

பத்து மாதங்களில் முறிந்துபோன ஆச்சியின் திருமண வாழ்க்கை

சற்றுமுன், செய்திகள்
தமிழ் ரசிகர்களலால் ஆச்சி என அன்போடு அழைக்கப்பட்டவர் மனோரமா, தனது திறனை வெளிப்படுத்தி திரையுலகில் சாதனை படைத்தவர். இவர் 1500-க்கும்  மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார். மேலும் பத்ம ஸ்ரீ விருது மற்றும்  கலைமாமணி  விருதுகள்  என பல விருதுகள் பெற்றுள்ளார். இப்படி சினிமா துறையில் பல உயரங்களை எட்டிய ஆச்சி அவர்களின் திருமண வாழ்க்கை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தாயுடன் வாழ்ந்து வந்த மனோரமா நாடகத்தில் நடிக்கும் கொண்டிருக்கும் போதே ராமநாதன் என்ற சக நடிகரை எதிர்ப்புக:ளை மீறி திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவரது திருமண வாழ்க்கை 10 மாதங்களே இருந்தது. காரணம் ராம நாதனின் உண்மை முகத்தை தெரிந்து கொண்டார் மனோரமா. ராமநாதன் விருப்பட்டு தன்னை திருமணம் செய்யவில்லை என்பதும், தன் நண்பர்களின் விட்ட சவாலை நிறைவேற்றவே திரு
வரும் ஆகஸ்ட் மாதத்தில் சமந்தா திருமணம்???

வரும் ஆகஸ்ட் மாதத்தில் சமந்தா திருமணம்???

சற்றுமுன், செய்திகள்
நடிகை சமந்தா, நாக சைதன்யாவுக்கு சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் இந்த ஆண்டு இறுதில் நடத்த முடிவு செய்திருந்தனர். இதற்கு முன்னதான நாக சைதன்யாவின் தம்பி அகில் மற்றும் அவரின் காதலி ஷ்ரேயாவுடன் திருமணம் நடத்த முடிவு செய்திருந்தன. எனவே அவரது காதலி  ஷ்ரேயாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்த நிலையில் திடீரென்று அகில்  ஷ்ரேயாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். எனவே அகில் திருமண ரத்தானது சகுன தடையாக நாக சைதன்யா வீட்டில் கருதுவதால் திருமணத்தை தள்ளி போடாமல் சீக்கிரம் நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளனர். வரும் ஆகஸ்ட் மாதங்களுக்குள் திருமணம் நடைபெற உள்ளது. மேலும் அவர்கள் இருவரும்  தற்போது  படப்பிடிப்பில்  இருவேறு திசையில் பிரிந்துள்ளனர். திருமணத்துக்கு பிறகும் நடிக்க முடிவு செய்திருக்கும் சமந்
கைப்பிடித்து பலன்கள் சொல்லும் நமீதா???

கைப்பிடித்து பலன்கள் சொல்லும் நமீதா???

சற்றுமுன், செய்திகள்
தமிழில் எங்கள் அண்ணா படம் மூலம் அறிமுகம் ஆனவர் நமீதா. ஏய், இங்கிலிஷ் காரன், விஜயுடன் அழகிய தமிழ் மகன் போன்ற படங்களில் நடித்து வந்த இவர் உடலில் கவனம் கொள்ளாததால் உடல் எடை அதிகமாகி நடிப்பை விட்டு விலகி இருந்தார். தற்போது தமிழ், மலையாளம் என மறுபடியும் நடிப்பில் பிசியாகி உள்ளார். நடிப்பை தவிர்த்து அவருடைய வாழ்க்கையை பற்றி கேட்ட போது, அவர் கூறியதாவது, நடிப்பை தவிர்த்து மலை ஏறுவது எனக்கு பிடிக்கும். இது போன்ற பயணங்கள் மனதை உறுதிபடுத்துகிறது. கடந்த 3 வருடங்களாக கல்வி, குழந்தைகள், பெண்கள் என அனைத்து துறைகளை பற்றி கவிதைகள் எழுதுகிறேன். இதை என் உதவியாளர் ஒரு புத்தகமாக வெளியீட ஆலோசனை கூறியிருக்கிறார்.இதை பற்றி விரைவில் முடிவு செய்வேன். மேலும் ஆன்மிகம் போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்துகிறேன். என்னைச் சந்திக்கும் நபர்களில் ஒருவரைத் தேர்வு செய்து, அவர்களின் கைகளை பிடித்துக்கொண்டு, சில நிமிடங்கள்
ஹிந்தி படங்களுக்கு ஏற்ப தனது தோற்றத்தை மாற்றும் அமலா பால்!!!

ஹிந்தி படங்களுக்கு ஏற்ப தனது தோற்றத்தை மாற்றும் அமலா பால்!!!

சற்றுமுன், செய்திகள்
மைனா படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். பின் தெய்வத்திருமகள்,முப்பொழுதும் உன் கற்பனைகள் மற்றும் விஜயுடன் தலைவா போன்ற படங்களில் நடித்தார். இந்நிலையில் இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து பின் இவர்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் விவாகரத்து பெற்றனர். இதை தொடர்ந்து தனுஷ் தயாரித்த வெளியான படம் அம்மா கணக்கு இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை தந்தது. பிறகு தனுஷ் நடிக்கும் வட சென்னை படத்தில் ஜோடியாக ஒப்பந்தம் ஆனார். மேலும் சிண்ட்ரல்லா, திருட்டு பயலே, மற்றும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என அடுத்தது படங்கள் குவித்தன. மேலும் இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த குயின் பட மலையாள ரீமேக்கிலும் நடிக்கிறார். தனுஷ் இந்தி படங்களில் நடித்திருப்பதால் அவர் மூலம் அமலாபாலுக்கு இந்தி பட வாய்ப்பும் வரும் என பேசப்படுகிறது. இதனால் ஹிந்தி படங்களுக்கு ஏற்ப தனது தோற்றத்தை மாற்ற உடல் பயிற்சி, சிகை அலங்கார சீரமைப்பு போன்ற
ரஜினியின் அடுத்த படத்தை  இயக்கும் மம்மூட்டி???

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் மம்மூட்டி???

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மலையாள நடிகர் மம்மூட்டி இணைந்து நடித்த படம் தளபதி இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இன்றும் ரசிகர்களிடையே பேசும் படமாக உள்ளது. தற்போது நடிகர் மம்மூட்டி ஒரு பேட்டியில் கூறும்  போது ரஜினியை இயக்குவது தன் வாழ்நாள் கனவு என கூறியுள்ளார். மேலும்  1997ஆம் ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளியான படம் பூதக்கண்ணாடி. இந்த படத்தில் ரஜினியை நடிக்க வைக்க , படத்தின் கதையை ரஜினியிடம் கூறியதாகவும், ஆனால் ரஜினி அதில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை என்றும், அதனால் அவரை மேலும் வற்புறுத்தாமல் நானே நடித்துவிட்டேன் எனவும் கூறியுள்ளார். ரஜினிகாந்த நடித்த 2.0 படம் தீபாவளி அன்று  வெளியிட  உள்ளனர்.  மேலும் இதை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.  இந்நிலையில்  மம்மூட்டியின் இந்த ஆசையை ரஜினி நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கபாலி தோற்றத்தில் மீண்டும் ரஜினிகாந்த்!!!

கபாலி தோற்றத்தில் மீண்டும் ரஜினிகாந்த்!!!

சற்றுமுன், செய்திகள்
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் கபாலி.  இந்த படத்தில் ரஜினிகாந்த் வயதான தோற்றத்தில் நடித்தார். இந்த தோற்றம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ரஜினி நடித்துள்ள 2.௦ படம் தீபாவளி அன்று  வெளியீட உள்ளனர். இதை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்க உள்ள படத்தில் ரஜினிகாந்த் மீண்டும் வயதான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கபாலி கதாபாத்திரத்தை விட மிக வலிமையாகவும், புதிதாகவும் இருக்கும் என்கின்றார்கள். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் ஆரம்பமாக உள்ளது. ரஜினிக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை வித்யா பாலன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது  . மேலும்  இது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் வெளியாகும் சூர்யா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!!!

விரைவில் வெளியாகும் சூர்யா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!!!

சற்றுமுன், செய்திகள்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம் இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் செந்தில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் மற்றும் சூர்யாவின் 2டி என்டேர்டைன்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகததால் சூர்யா ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இது கூறித்து இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை தெரிவித்தார். அவர் கூறியதாவது “தானா சேர்ந்த கூட்டம்” படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்னும் முழுமையாக முடியாததால் வெளியிட முடியவில்லை. எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள் போ