ஆசிரியர்: மகாலட்சுமி

இவர் இணையதள செய்திகள் பிரிவில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சினிமா மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் கொட்டுப்பதில் முதன்மையானவர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பதில் சிறப்பு புலமை வாய்ந்தவர். சினிமா துறையில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பழம்பெரும் நடிக- நடிகைகள், இயக்குனர்கள் குறித்த சுவையான சம்பவங்களை தொகுத்து சிறப்பு கட்டுரைகளாக வழங்குவதில் பெயர் பெற்றவர். தொடர்புகொள்ள- mahamurugan@gmail.com
மணிரத்னம் படத்தில் மீண்டும் நடிக்கும் ஐஸ்வர்யா ராய்…?

மணிரத்னம் படத்தில் மீண்டும் நடிக்கும் ஐஸ்வர்யா ராய்…?

சற்றுமுன், செய்திகள்
இயக்குனர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிப்பார் எனத் தெரிகிறது. மணிரத்னம் இயக்கிய இருவர் படம் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். அவரின் இயக்கத்தில் குரு மற்றும் ராவணன் ஆகிய படங்களில் நடித்தார். அதன் பின், நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு பின், சில பாலிவுட் படங்களில் மட்டும் அவர் நடித்தார். காற்று வெளியிடை படத்திற்கு பின் தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோரை வைத்து மணிரத்னம் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். அதில் நடிப்பதற்காக ஐஸ்வர்யா ராயிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஒருவேளை ஐஸ்வர்யா ராய் சம்மதம் தெரிவித்தால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. மணிரத்னம் இயக்கும் இரண்டு படங்களில் அவர் நடிக்க இருக்கிறார் என்ற செய்தியும
காலா படத்தில் முக்கிய வேடத்தில் அஞ்சலி பட்டேல்..

காலா படத்தில் முக்கிய வேடத்தில் அஞ்சலி பட்டேல்..

சற்றுமுன், செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படத்தில் பாலிவுட் நடிகை அஞ்சலி பட்டேல் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படம் காலா. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 2 படங்கள் வெளியிடப்பட்டது. இதில் ரஜினிக்கு ஜோடியாக ஏற்கனவே பாலிவுட் நடிகையான ஹூமா குரோஷி நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் ஒரு டெரரான வேடத்தில் மற்றொரு பாலிவுட் நடிகையான அஞ்சலி பட்டேல் நடிக்க இருக்கிறார். காலா என்பது கரிகாலன் என்பதன் சுருக்கம் எனவும், நெல்லை மாவட்டத்திலிருந்து மும்பைக்கு சென்று செட்டிலான மக்களை பற்றிய கதை எனவும் பா.ரஞ்சித் கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 28ம் தேதி மும்பையில் தொடங்கப்படவுள்ளது.
தோற்றுப்போனேன்.. மாறிவிட்டேன் – சேரன் எடுத்த அதிரடி முடிவு

தோற்றுப்போனேன்.. மாறிவிட்டேன் – சேரன் எடுத்த அதிரடி முடிவு

சற்றுமுன், செய்திகள்
சில வருடங்களாக திரைப்படங்களை இயக்காமலும், நடிக்காமலும் இருந்த சேரன் தற்போது புதிய படங்களை இயக்கவுள்ளார். சேரன் கடைசியாக இயக்கிய படம் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை. இப்படத்திற்கு பின் சேரன் எந்த படத்தையும் இயக்கவில்லை. மேலும், எந்த திரைப்படத்திலும் நடிக்கவுமில்லை. இந்நிலையில், அவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: என் இதயம் நிறைந்த அன்பு ரசிகர்களே..தொடர்ந்து எனக்கும் என் திரைப்படங்களுக்கும் ஆதரவு அளிக்கும் தமிழ் பண்பாளர்களே வணக்கம்.. மூன்று வருடங்களாக புதிய முயற்சி என்ற நோக்கில் மலையை புரட்டிப்போட்டுவிடலாம் என முயன்று முட்டி முட்டி முடியாமல் தோற்றுப்போனேன்.. பிறகுதான் புரிந்தது இங்கே சிறுகல்லை நகர்த்தக்கூட முடியாத அளவு தவறுகளும் பொறாமையுணர்வுகளும் பரந்தமனப்பான்மை இன்மையும் புரையோடிப்போயிருக்கிறது என..  எனவே இந்த சமூக மாற்றம் எ
சுற்றி இருப்பவர்கள் பேச்சை கேட்டு ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது – கஸ்தூரி அதிரடி

சுற்றி இருப்பவர்கள் பேச்சை கேட்டு ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது – கஸ்தூரி அதிரடி

சற்றுமுன், செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருதுபற்றி நடிகை கஸ்தூரி தொடர்ந்து பரபரப்பான கருத்துகளை தெரிவித்து வருகிறார். சமீபத்தில் தன்னுடைய ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் பற்றி பேசியதுதான் தற்போது ஹாட் நியூஸ். அவருக்கு ஆதரவாக சில அரசியல் தலைவர்களும், எதிராக சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் “நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்ப்பாராசூழ்நிலையில் கூட டக்கென முடிவெடுக்கும் திறம்வேண்டும். வருவேனா மாட்டேனா என்றே வருடக்கணக்கில் யோசிப்பவர்” என குறிப்பிட்டுள்ளார். அதாவது, அரசியலுக்கு வருவது பற்றி இவ்வளவு வருடங்கள் யோசித்துக்கொண்டிப்பவர் எப்படி ஒரு தலைவராக, சிக்கலான சூழ்நிலையில் முடிவெடுப்பார் என அவர் கேள்வி எழுப்பியிருய்ந்தார். மேலும் “போர் போர்..அக்கப்போர்” என கிண்டலடித்தார். இவரின் கருத்திற்கு ரஜினி ரசிகர்கள் பலர் எத
கர்நாடகாவில் ரஜினிக்கு சொத்துக்கள் இல்லை – ராஜ்பகதூர் விளக்கம்

கர்நாடகாவில் ரஜினிக்கு சொத்துக்கள் இல்லை – ராஜ்பகதூர் விளக்கம்

சற்றுமுன், செய்திகள்
கர்நாடக மாநிலத்தில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு முதலீடுகளோ, பெரிய அளவில் சொத்துகளோ கிடையாது என ரஜினியின் நீண்ட கால நண்பர் ராஜ்பகதூர் கூறியுள்ளார். சமீபத்தில் தன்னுடைய ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் பற்றி பேசியதுதான் தற்போது ஹாட் நியூஸ். அவருக்கு ஆதரவாக சில அரசியல் தலைவர்களும், எதிராக சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ரஜினியின் நீண்ட கால நண்பர் ராஜ்பகதூர் “ ரஜினி விரைவில் அரசியலுக்கு வருவார். தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என அவர் விரும்புகிறார். பலர் நினைப்பது போல் அவர் கர்நாடகாவில் சொத்துக்களை வாங்கி குவிக்கவில்லை. இங்கு வந்தால் தங்குவதற்கு இரண்டு வீடுகளை மட்டுமே அவர் வாங்கியிருக்கிறார். மற்றபடி அவரது அனைத்து சொத்துகளும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அவரின் மூதலீடுகள் அனைத்தும் நியாயமான முறையிலேயே செய்த
வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்கிய விஷால் – பின்னணி என்ன?

வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்கிய விஷால் – பின்னணி என்ன?

சற்றுமுன், செய்திகள்
சினிமா துறை சார்பில் வருகிற 30ம் தேதி அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தத்தை, நடிகரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் வாபஸ் பெற்றுள்ளார். புதிய படங்களுக்கான சேவை வரி குறைப்பு, திருட்டு விசிடி ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 30ம் தேதி முதல் சினிமா துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் எனவும், அன்று முதல் சினிமா படப்பிடிப்பு எதுவும் நடைபெறாது என விஷால் அறிவித்திருந்தார். இதற்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட வர்த்தக சபை ஆகியவை ஆதரவு தெரிவிக்க மறுத்துவிட்டன. மேலும், வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என இயக்குனர்கள் சங்கம் சார்பாக ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். எனவே, இந்த போராட்டத்தை விஷால் வாபஸ் பெற்றார்.
போர்…போர்…அக்கப்போர் – ரஜினியை கலாய்க்கும் கஸ்தூரி

போர்…போர்…அக்கப்போர் – ரஜினியை கலாய்க்கும் கஸ்தூரி

சற்றுமுன், செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தனது ரசிகர்களை சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் ரஜினி, தனது அரசியல் பிரவேசம் பற்றி நாசுக்காக பேசி வருகிறார். ஏறக்குறைய அவர் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவரின் அரசியல் எண்ட்ரிக்கு சில அரசியல் தலைவர்கள் வரவேற்பும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் “நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்ப்பாராசூழ்நிலையில் கூட டக்கென முடிவெடுக்கும் திறம்வேண்டும். வருவேனா மாட்டேனா என்றே வருடக்கணக்கில் யோசிப்பவர” என குறிப்பிட்டுள்ளார். அதாவது, அரசியலுக்கு வருவது பற்றி இவ்வளவு வருடங்கள் யோசித்துக்கொண்டிப்பவர் எப்படி ஒரு தலைவராக, சிக்கலான சூழ்நிலையில் முடிவெடுப்பார் என அவர் கேள்வி எழுப்பியுள்
படப்பிடிப்பே துவங்கவில்லை ; ரூ.350 கோடி வசூல் செய்த பிரபாஸ் படம்

படப்பிடிப்பே துவங்கவில்லை ; ரூ.350 கோடி வசூல் செய்த பிரபாஸ் படம்

சற்றுமுன், செய்திகள்
பாகுபலி ஹீரோ பிரபாஸ் அடுத்து நடிக்கவுள்ள திரைப்படத்தின் இந்திய உரிமை ரூ.350 கோடியை வசூல் செய்துள்ளது. நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் வசூலில் பெரிய சாதனை படைத்துள்ளது. அதிலும், பாகுபலி2 படம் இதுவரை ரூ.1500 கோடி வசூல் செய்து, இந்திய சினிமா வரலாற்றில் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், பிரபாஸ் அடுத்து நடிக்க உள்ள படம் சாஹோ. இந்த படம் தெலுங்கு, தமிழ்,ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. இந்த படம் பிரபாஸிற்கு 19வது படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு கூட இன்னும் துவங்கப்படவில்லை. ஆனால், இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு கம்பெனி ரூ.350 கோடி விலை கொடுத்து வாங்கியுள்ளது.. இதுவரை எந்த படத்தின் வெளியீட்டு உரிமையும் இவ்வளவு அதிக விலைக்கு விலை போனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக… பாகுபலி2 செய்த சாதனை…

இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக… பாகுபலி2 செய்த சாதனை…

சற்றுமுன், செய்திகள்
இந்திய சினிமா வரலாற்றில் எந்த திரைப்படமும் இதுவரை செய்யாத வசூலை பாகுபலி படம் வசூலித்துள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பாகுபலி2 படம் பாக்ஸ் ஆபிசில் மெஹா ஹிட் அடித்தது. பாலிவுட், கேரள ஆகிய மாநிலங்களில் எந்தப்படமும் செய்யாத வசூலை இந்தப்படம் வசூலித்துள்ளது. வெளியான 10 நாளில் இந்தப்படம் ரூ.1000 கோடியை வசூல் செய்ததாக கூறப்பட்டது. ஆனால், இதுபற்றி படக்குழு எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில், பாகுபலி படக்குழு தனது அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கதில் “பாகுபலி2 ரூ.1000 கோடியை வசூலித்துள்ளது. இந்த நாள் இந்திய சினிமா வரலாற்றில் நினைவு கொள்ளப்படும். உங்களின் ஆதரவுக்கு நன்றி” என குறிப்பிட்டார்கள். இதன் மூலம் இந்திய சினிமா வரலாற்றில் ரூ. 1000 கோடியை வசூல் செய்த முதல் படம் என்ற பெருமை பாகுபலி தட்டிச் சென்றுள்ளது. இந்தப் படம் இன்னும் பல கோடிகளை வசூலித்து சாதனை படைக்கும
ரூ.50 கோடி வசூல் – கேரளாவில் வரலாறு படைத்த பாகுபலி

ரூ.50 கோடி வசூல் – கேரளாவில் வரலாறு படைத்த பாகுபலி

சற்றுமுன், செய்திகள்
கேரளாவில் வெகு விரைவாக ரூ.50 கோடி வசூல் செய்த படம் என்ற பெருமையை பாகுபலி படம் தட்டிச் சென்றுள்ளது. பாகுபலி படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாள ஆகிய அனைத்து மொழிகளிலும் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. அதிலும் கேரளாவில், இந்தப் படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. மலையாள படங்களில் மோகன்லால் நடித்து சமீபத்தில் வெளியான புலிமுருகன் படமே ரூ.50 கோடி வசூல் செய்தது. அதுவும், நிறைய நாட்கள் ஓடிய பின்பே, இந்த வசூலை அந்த படம் எட்டியுள்ளது. ஆனால், அங்கு வெளியான பாகுபலி படம் வெகு விரைவாக ரூ.50 கோடியை வசூல் செய்து வரலாறு படைத்துள்ளது. அதேபோல், பாலிவுட்டில் அமீர்கான் நடித்த தங்கல் படமே ரூ.350 கோடி வசூல் செய்து முதலிடத்தில் இருந்தது. அதையும் பாகுபலி மிஞ்சி விட்டது. ஒரு வெளிமாநில மொழி படம், மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியான பாகுபலி இந்த வெற்றியை பெற்று, கேரள மற்றும் பாலிவுட்காரர்களை வாயை பிளக்க வைத்துள்ளது.