ஆசிரியர்: பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393
அதர்வாவின் அடுத்த படத்தை இயக்கும் ஆர்.கண்ணன்

அதர்வாவின் அடுத்த படத்தை இயக்கும் ஆர்.கண்ணன்

சற்றுமுன், செய்திகள்
சமீபத்தில் வெளியான 'இவன் தந்திரன்' படத்தை இயக்கிய இயக்குனர் ஆர்.கண்ணன் அடுத்த இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிக்க அதர்வா முரளி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை அதர்வா மற்றும் ஆர்.கண்ணன் தங்களது டுவிட்டரில் உறுதி செய்துள்ளனர். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்திற்கு ராதான் என்பவர் இசையமைக்கவுள்ளார். இவர் சமீபத்தில் சூப்பர் ஹிட் ஆன 'அர்ஜூன் ரெட்டி' என்ற தெலுங்கு படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை, மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் ஆர்.கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு பிரச்சன்னா ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
விஷாலுக்கு வருமானவரித்துறை சம்மன்

விஷாலுக்கு வருமானவரித்துறை சம்மன்

சற்றுமுன், செய்திகள்
நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் வீடு மற்றும் அலுவலகத்தில் இன்று மாலை ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் வருமான வரி சோதனை நடத்தியதாக வந்த தகவல் உண்மையல்ல என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மாலை சோதனை நடத்தியது வருமான வரித்துறை அதிகாரிகள் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. சோதனைக்கு பின்னர் அக்டோபர் 27ஆம் தேதி விஷால் வருமான வரித்துறை அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விஷால் கூறியபோது, 'இதுவொரு வழக்கமான சோதனையே. நான் சரியாக வருமான வரி கட்டி வருவதால் இதுகுறித்து பயப்பட தேவையில்லை. ஒருவேளை இந்த சோதனை உள்நோக்கம் கொண்டதாக இருந்தால் அதை சந்திக்க தயார்' என்று கூறினார்.
த்ரிஷாவின் திடீர் முடிவு ஏன்? சாமி 2′ படக்குழுவினர் அதிர்ச்சி

த்ரிஷாவின் திடீர் முடிவு ஏன்? சாமி 2′ படக்குழுவினர் அதிர்ச்சி

சற்றுமுன், செய்திகள்
சீயான் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கி வந்த 'சாமி 2' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து வெகுவிரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ள நிலையில் இந்த படத்தின் நாயகிகளில் ஒருவரும், இந்த படத்தின் முதல் பாக நாயகியுமான த்ரிஷா திடீரென படத்தில் இருந்து விலகிவிட்டார். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தனக்கு இந்த படத்தில் கூடுதல் முக்கியத்துவம் வேண்டும் என்று த்ரிஷா வற்புறுத்தியதாகவும், ஆனால் இந்த படத்தின் நாயகி கீர்த்திசுரேஷ் என்பதால் அவருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் த்ரிஷாவுக்கு கொடுக்க முடியாது என்று ஹரி மறுத்துவிட்டதாலும் த்ரிஷா இந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது இருப்பினும் படத்தில் இருந்து விலகினாலும் வெறுப்பை மனதில் வைத்து கொள்ளாமல், படக்குழுவினர்களுக்கு தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் த்ரிஷா
‘மெர்சல்’ படத்திற்கு ஆதரவாக களமிறங்கிய அமீர்

‘மெர்சல்’ படத்திற்கு ஆதரவாக களமிறங்கிய அமீர்

சற்றுமுன், செய்திகள்
அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளி அன்று வெளிவந்த ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்றிருந்த சில வசனங்களை நீக்க கோரி ப.ஜ.க தரப்பினரிடம் தொடர்ந்து வலுத்து வந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, “தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும் கருத்துகளை அகற்றுவதற்குத் தயாராக இருக்கிறோம்” என்று ஸ்ரீ தேனாண்டாள் பில்ம்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த முடிவு அவர்களாக எடுத்த முடிவா அல்லது அழுத்தத்தின் பேரில் அல்லது அச்சுறுத்தலின் பேரில் எடுத்த முடிவா என்று வாக்காடல்கள் நடந்த வண்ணம் உள்ளன. மெர்சல் விவகாரம் குறித்து திரைப்பட இயக்குனர் திரு அமீர் பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றின் சாரம்சம் இதோ: “தேனாண்டாள் நிறுவனம் இதை விருப்பதுடனா செய்கின்றனர்? அழுத்தம் காரணமாகத்தான் செய்துள்ளனர். இன்றைக்கு ஆளும் மத்திய அரசாக இருக்கட்டும் மாநில அராக இருக்கட்டும், மாநில அரசுக்கு மத்திய அரசு கொடுக்கும் அழுத்தம்,
மெர்சல் பட விவகாரத்தில் பிரபலங்களின் ஆதரவு

மெர்சல் பட விவகாரத்தில் பிரபலங்களின் ஆதரவு

சற்றுமுன், செய்திகள்
சமீபத்தில் தீபாவளி தினத்தன்று இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் வாதாடப்படும் மையமாக மாறியுள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான கருத்துகளே இதற்கு காரணமாக அமைந்துள்ளன. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியிலிருந்தே பெரும் எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் உள்ளன. அக்கட்சியினர் ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான கருத்துகள் தவறான செய்தியை வழங்குவதாகவும் எனவே இக்கருத்துகள் நீக்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றனர். சினிமாவில் வந்த ஒரு கதாப்பாத்திரத்தின் வசனத்திற்கு இவர்கள் காட்டும் அக்கறையை விவசாயிகள் டெல்லியில் போராடிய போதும் காட்டியிருக்கலாமே என்று ஒரு சில தரப்பினர் வசனங்கள் நீக்கப்படுவதற்கு தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகின்றனர். இந்த விஷயத்தில் தல ரசிகர்களும்
‘மெர்சல் ஒரிஜினல் நாயகனும் ஜெராக்ஸ் காப்பிகளும்

‘மெர்சல் ஒரிஜினல் நாயகனும் ஜெராக்ஸ் காப்பிகளும்

சற்றுமுன், செய்திகள்
உலக நாயகன் கமல்ஹாசன் மூன்று வேடத்தில் நடித்த சூப்பர் ஹிட் படமான 'அபூர்வ சகோதரர்கள்' படத்தின் காப்பி தான் 'மெர்சல்' என்ற விமர்சனம் கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டது. அதற்கு காரணம் பாஜக தமிழக தலைவர்களான தமிழிசை மற்றும் எச்.ராஜா என்று கூறினால் மிகையாகாது. இந்த நிலையில் பல சோதனைகளை சந்தித்து வரும் 'மெர்சல்' திரைப்படத்தை இன்று கமல்ஹாசன் பார்த்தார். அவருடன் விஜ்ய, மற்றும் இயக்குனர் அட்லியும் படம் பார்த்தனர். கமல்ஹாசனுடன் அட்லி மற்றும் விஜய் இருக்கும் புகைப்படத்தையும் அட்லி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதில் ஒரு வேடிக்கை என்னவெனில் இந்த புகைப்படத்தின் பின்னணியில் அபூர்வ சகோதரர்கள்' படத்தின் போஸ்டர் உள்ளது. தான் காப்பி அடித்ததை அட்லி ஒப்புக்கொண்டுள்ளரா? என்பதையே இந்த புகைப்படம் உணர்த்துகிறது.
விஜய்க்கு பயந்து பின்வாங்கிவிட்டாரா சிவகார்த்திகேயன்?

விஜய்க்கு பயந்து பின்வாங்கிவிட்டாரா சிவகார்த்திகேயன்?

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ள நிலையில் அதே நாளில் வேறு சில படங்களின் அறிவிப்பும் வெளிவந்தது. இந்த நிலையில் திடீரென சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. இரண்டு பெரிய படங்கள் மோதினால் வசூல் பாதிக்கும் என்ற நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் திடீரென பின்வாங்கிவிட்டதாக தெரிகிறது. வேலைக்காரன் திரைபப்டம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி அல்லது பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரங்கல் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் மெர்சலாகப்போகும் விஜய்யின் ‘மெர்சல்

அமெரிக்காவில் மெர்சலாகப்போகும் விஜய்யின் ‘மெர்சல்

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் முடிந்துவிடும் என்றும் இன்னும் ஒருசில நாட்களில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய தொகை கொடுத்து தயாரிப்பாளரிடம் இருந்து அட்மஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் பெற்றுள்ளது. இந்த தொகை ரஜினி படத்திற்கு பின்னர் வியாபாரமாகியுள்ள மிகப்பெரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது. கவண், விக்ரம் வேதா என தொடர்ச்சியாக பல வெற்றி படங்களை அமெரிக்காவில் வெளியிட்டு வரும் அட்மஸ் நிறுவனம் இந்த படத்தை அமெரிக்கா முழுவதும் பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளது.
சினிமா வேண்டாம்! எல்லோரும் அரசியலுக்கு வாருங்கள்: விஜய்சேதுபதி

சினிமா வேண்டாம்! எல்லோரும் அரசியலுக்கு வாருங்கள்: விஜய்சேதுபதி

சற்றுமுன், செய்திகள்
சென்னை லயோலா கல்லூரியில் அனிதாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 'அனிதா நினைவேந்தல்' என்ற நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ், பா.ரஞ்சித், விஜய்சேதுபதி உள்ளிட்ட பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி பேசியதாவது: 'கல்வி என்பது அடிப்படைத் தேவை. அதுக்காக நாம ஓர் உயிரை இழந்துட்டு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கோம். இப்ப இந்த இழப்பை நாம சர்ச்சைனு பேசிக்கிட்டு இருக்கோம். நம்ம மேல தொடர்ந்து ஓர் அரசியல் வைக்கப்பட்டுக்கிட்டே இருக்கு. அதுதான் சாதி. இந்த இடத்துல இருந்துதான் நம்மை பிரிக்க ஆரம்பிக்கிறாங்க. அதை முதலில் ஒழிக்கணும். இப்ப நாம போராடுறோம். போறாடுபவர்களைச் சமாளிக்கிறவங்க நிறைய பேர் வளர்ந்துட்டாங்க. அதனால போராடும் முறையிலும் நாம மாற்றம் கொண்டு வரணும்னு நினைக்கிறேன். நாம ஒரே இடத்துல உட்கார்ந்து; ஒரே இடத்துல கூடி பேசினா அதை ச
இதையெல்லாம் தமிழ் படத்தில் யாருமே சொல்லவில்லையே! விவேகம் படத்தை புரிஞ்சிக்கோங்க

இதையெல்லாம் தமிழ் படத்தில் யாருமே சொல்லவில்லையே! விவேகம் படத்தை புரிஞ்சிக்கோங்க

சற்றுமுன், செய்திகள்
தல அஜித்தின் விவேகம் படத்தை ஏராளமான பெய்டு விமர்சகர்கள் நெகட்டிவ் கமெண்ட் கொடுத்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக அஜித் ரசிகர்கள் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வந்தனர். இந்த நிலையில் தற்போது நடுநிலை பார்வையாளர்களே களத்தில் இறங்கிவிட்டனர். இந்த படத்தில் உள்ள முக்கிய விஷயங்கள் குறித்து வீடியோவில் பேசி டுவிட்டர், பேஸ்புக்கில் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரி மாணவி ஒருவர் தமிழ் படவுலகிற்கு 'விவேகம்' படம் ஒரு புதுமை. இதுவரை யாருமே ஹாலோகிராம், சீக்ரைட் சொசைட்டி, மார்ஸ் கோட் ஆகியவை குறித்து பேசியதே இல்லை. துப்பாக்கி படத்திற்கு பின்னர்தான் நமக்கு ஸ்லீப்பர் செல் என்றால் என்ன என்பது தெரியவந்தது. அதே போல் இந்த படத்திலும் கற்றுக்கொள்ள நிறைய விஷயம் உள்ளது 'என்று கூறியுள்ளார்.