ஆசிரியர்: சிவ குமார்

சிவகுமார்(Trainee Subeditor)- இவர் திரைத்துறையை சார்ந்தவர்.கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இணையதள செய்தி பிரிவிற்கு புதியவர். ஆனாலும் அனுபவம் உள்ள ஆசிரியர் போன்று செய்திகள் கொடுப்பது இவரது சிறப்பு. தொடர்புகொள்ள- 9788855544
பார்த்திபனுக்கு சல்யூட் – 3 வருடம் கழித்து பாராட்டிய சேரன்

பார்த்திபனுக்கு சல்யூட் – 3 வருடம் கழித்து பாராட்டிய சேரன்

சற்றுமுன், செய்திகள்
நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இயக்கிய படத்தை தற்போது இயக்குனர் சேரன் பாராட்டியுள்ளார். இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். ஒரு வித்தியாசமான கதையை, வித்தியாசமான கோணத்தில் இயக்கியிருந்தார் பார்த்திபன். இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததோடு, வசூல் ரீதியாகவும் இப்படம் பெரிய வெற்றி பெற்றது. அதன் பின்பு, கோடிட்ட இடத்தை நிரப்புக என்ற படத்தை பார்த்திபன் இயக்கி அது வெளியாகி, தியேட்டரிலிருந்து வெளியேறிவிட்டது. இந்த படம் ரசிகர்களை கவர தவறியதால், பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை. இந்நிலையில், 3 வருடங்கள் கழித்து இயக்குனர் சேரன் பார்த்திபனின் இயக்கத்தை பாராட்டியுள்ளார். “கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் நேற்றுதான் பார்த்தேன். பார்த்திபன் சாரின் மிகச்சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.. Salute to you ParthipanSir.” என அவர் குறிப்பிட்டுள்ளார். சேரன் இய
ஓசியில் சாப்பிடும் மனநிலையில் தமிழர்கள் – நடிகர் சர்ச்சை பேச்சு

ஓசியில் சாப்பிடும் மனநிலையில் தமிழர்கள் – நடிகர் சர்ச்சை பேச்சு

சற்றுமுன், செய்திகள்
தமிழர்கள் பற்றி நடிகர் மோகன்ராம் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் நடிகர் மோகன்ராம். இவர் சமீபத்தில், ஒரு தொலைக்காட்சியில் இடம்பெற்ற திருட்டு விசிடி தொடர்பான விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என தமிழர்கள் சொன்னதெல்லாம் ஒரு காலம். அது தற்போது மாறிவிட்டது. ஓசியில் கிடைத்தால் எதையும் சாப்பிட்டு விடலாம் என்கிற மனநிலைக்கு வந்து விட்டார்கள்” என கருத்து தெரிவித்தார். இவரின் கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஹாலிவுட் படங்களை காப்பி அடிக்கும் சினிமாகாரர்கள் பற்றி என்ன சொல்வது என எழுத்தாளர் மதிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகுபலி-2 படத்தின் 5 நாள் வசூல் என்ன தெரியுமா?

பாகுபலி-2 படத்தின் 5 நாள் வசூல் என்ன தெரியுமா?

சற்றுமுன், செய்திகள்
சமீபத்தில் வெளியான பாகுபலி 2 படம் வசூலில் இந்திய அளவில் மாபெரும் சாதனையை நிகழ்த்தி வருகிறது. ராஜமௌலியின் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் பாகுபலி2. இந்தப் படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூலித்து சாதனை புரிந்தது. அதன் பின் 3 நாளில் ரூ.400 கோடியை தாண்டியது. தற்போது 5 நாளில் ரூ.700 கோடியை தாண்டி இந்திய சினிமா அளவில் மிகப்பெரிய சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது. இதுவரை இந்தியாவில் வெளியான எந்த படமும், இவ்வளவு வேகமாக இவ்வளவு பெரிய தொகையை வசூலித்ததில்லை. இதற்கு முன் அமீர்கான் நடித்த பிகே படத்தின் மொத்த வசூல் ரூ.792 கோடி என்பதுதான் சாதனையாக இருந்தது. ஆனால், பாகுபலி படம் ரூ.1000 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்திய சினிமாவில் அதிக வசூல் ஆன படம் என்ற பெருமையை பாகுபலி2 படம் தட்டிச்செல்லும் என்பதில் ஐயமில்லை...
பாகுபலி கதையாசிரியரும் ராகவா லாரன்ஸும் இணையும் புதிய படம்..

பாகுபலி கதையாசிரியரும் ராகவா லாரன்ஸும் இணையும் புதிய படம்..

சற்றுமுன், செய்திகள்
பாகுபலி படத்தின் கதையாசிரியர் அடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ஒரு புதிய படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுத இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் பல வெற்றி படங்களுக்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியவர் விஜயேந்திர பிரசாத். இவர் இயக்குனர் ராஜமௌலியின் தந்தை அவர். ராஜமௌலி இயக்கிய 11 படங்களில் 9 படங்களுக்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியவர் இவர்தான். மேலும், பாகுபலி முதல் மற்றும் இரண்டு பாகங்களுக்கும் இவர்தான் கதையாசிரியர். சமீபத்தில் வெளியான பாகுபலி2 மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இந்திய அளவில் அதிக வசூலை இந்த படம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்லி இயக்கத்தில் தற்போது நடிகர் விஜய் நடித்து வரும் படத்திற்கு விஜயேந்திர பிரசாத்தே கதையாசிரியர். அடுத்து, இவர் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்திற்கு கதை எழுதுகிறார். ராஜமௌலியின் உதவியாளர் மகாதேவ் இப்படத்தை இயக
முட்டிக் கொள்ளும் திரை உலகினர் – புது படங்கள் வெளியவாதில் சிக்கல்

முட்டிக் கொள்ளும் திரை உலகினர் – புது படங்கள் வெளியவாதில் சிக்கல்

சற்றுமுன், செய்திகள்
தமிழ் சினிமாவின் வினியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே எழுந்துள்ள பிரச்சனையால் புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக சிறிய நடிகர் முதல் பெரிய நடிகர் வரை நடித்து வெளியாகும் பெரும்பாலான படங்கள் தோல்வி அடைகின்றன. இதனால், தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், விஷால் தலைமையில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, இந்த பிரச்சனையை அவர்கள் எப்படி தீர்ப்பார்கள் என தமிழ் சினிமா உலகினர் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருகிறார்கள். சமீபத்திய படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தி வருவதால், எம்.ஜி (மினிமம் கேரண்டி) முறையில் படங்களை இனி வாங்கி வெளியிடப் போவதில்லை எனவும், அவுட் ரேட் சதவீத அடிப்படையில் மட்டுமே படங்களை வாங்க வினியோகஸ்தர்கள் முடிவெடுத்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஒருவேளை, இதை தயாரிப்பாளர்
15 விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வழங்கிய பிரசன்னா-சினேகா

15 விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வழங்கிய பிரசன்னா-சினேகா

சற்றுமுன், செய்திகள்
கடன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள சில விவசாயிகளுக்கு நடிகர் பிரசன்னா-சினேகா தம்பதி நிதியுதவி அளித்துள்ளது. வங்கிகளில் கடன்பட்டு, அதை அடைக்க முடியால் தமிழக விவசாயிகள் தவித்து வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் தலைநகர் டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழக விவசாயிகள் சிலருக்கு உதவ முன்வந்த நடிகர் பிரசன்னா-சினேகா தம்பதி, வங்கிகளில் கடன் பெற்று, அதை செலுத்த முடியாமல் தவிக்கும் 15 விவசாயிகளை தேர்ந்தெடுத்து, ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தில், நேற்று இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது பேசிய பிரசன்னா-சினேகா தம்பதி “ விவசாயிகள் இல்லையெனில் நாம் இல்லை. பல்வேறு பிரச்சனைகளால் துயரப்படும் அவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என தோன்றியது. அதற்காக 15 விவசாயிகளை தேர்ந்தெடுத்து
சாவித்ரி கதையில் ஜெமினிகணேசன் வேடத்தில் துல்கர் சல்மான்…

சாவித்ரி கதையில் ஜெமினிகணேசன் வேடத்தில் துல்கர் சல்மான்…

சற்றுமுன், செய்திகள்
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு சினிமாவில் ஜெமினி கணேசன் வேடத்தில் கேரள நடிகர் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக எடுக்கப்படவுள்ளது. நாக் அஸ்வின் இயக்கும் இப்படத்திற்கு மகாநதி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான சாவித்ரி வேடத்தில் நடிகை சமந்தா நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. அதன் பின் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது அவர்கள் இருவருமே அப்படத்தில் நடிக்கின்றனர். அதேபோல், சாவித்ரியோடு அதிக படங்களில் நடித்தவரும், அவரின் கணவருமான ஜெமினி கணேசன் வேடத்தில் சூர்யா நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அது உண்மையில்லை என தெரிய வந்தது. தற்போது அந்த வேடத்தில் கேரள நடிகர் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஒரு முக்கிய
சாயிஷாவை உடனே புக் பண்ணுங்க – ஜெயம் ரவி அட்வைஸ்

சாயிஷாவை உடனே புக் பண்ணுங்க – ஜெயம் ரவி அட்வைஸ்

சற்றுமுன், செய்திகள்
இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து விரைவில் வெளியாக உள்ள படம் வனமகன். இப்படத்தில் ஜெயம் ரவி காட்டில் வாழும் மனிதராக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சாயிஷா என்ற புதுமுகம் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இது அவருக்கு 50வது படமாகும். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் ஜெயம் ரவி கலந்து கொண்டு பேசியவதாவது: இதுவரைக்கும் நான் என்னை ரொம்ப நல்லவன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனால், இயக்குனர் விஜயை சந்தித்த பிறகுதான் நான் எவ்வளவு கெட்டவனாக இருந்திருக்கிறேன் என்பது புரிந்தது. நான் வனமகன் என்றால், இயக்குனர் விஜய் ஒரு தெய்வ மகன். இந்த படத்தில் என்னுடன் நடித்துள்ள் சாயிஷா மிகவும் திறமையான நடிகை. அவரின் கால்ஷீட் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். எனவே, தயாரிப்பாளர்கள் அவரை இப்போதே புக் பண்ணிடுங்க... சினிமாவில் நடிப்பது போராடிக்கக் கூடாது என்பதால
275 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிக்கும் கபாலி…

275 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிக்கும் கபாலி…

சற்றுமுன், செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான கபாலி படம் மதுரையில் உள்ள திரையங்கில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. எஸ்.தாணு தயாரிப்பில், இயக்குனர் ப.ரஞ்சித் இயக்கத்தில், கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான ‘கபாலி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் வயதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை ராதிகா ஆப்தே நடித்திருந்தார். இந்த திரைப்படம் மதுரையில் உள்ள மணி இம்பாலா என்ற தியேட்டரில் 275 நாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் கபாலி275 என்ற ஹேஸ்டேக் டிவிட்டரில் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
தனுஷை பாராட்டித் தள்ளிய இயக்குனர் ஷங்கர்…

தனுஷை பாராட்டித் தள்ளிய இயக்குனர் ஷங்கர்…

சற்றுமுன், செய்திகள்
ப.பாண்டி படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர் தனுஷ் குழுவினரை பாராட்டியுள்ளார். நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என சினிமாவில் பல முகம் காட்டிய நடிகர் தனுஷ், ப.பாண்டி மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். ஆனால், அதில் அவர் கதாநாயகனாக நடிக்காமல், ராஜ்கிரணை நடிக்க வைத்தார். ராஜ்கிரணின் சிறு வயது கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்தார். இந்த படம் கடந்த வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களின் ஆதரவை பெற்றது. ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளும் இப்படத்தை பற்றி நேர்மறையான விமர்சனங்களை எழுதின. மேலும், நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் பலரும் தனுஷின் இயக்கம் பற்றி சிலாகித்து கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்தப் படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர், தனுஷ் குழுவினரை பாராட்டியுள்ளார். தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி குறிப்பிட்டுள்ள ஷங்கர் “பவர் பாண்டி ஒரு எளிய, அழகான, மனதை தொடக்க