விஜய்கார்த்திக், விக்கி ஆதித்யா, சபரி என மூன்று நண்பர்கள் தங்களின் காதல் தொடர்ந்து சொதப்புவதால் ஒரு வித்தியாச முயற்சியாக காதலிக்கும் ஜோடியை சேர்த்து வைப்பது என லட்சியம் கொண்டு அதில் வெற்றி பெற்றார்களா என்பதுதான் கதையே.

இப்படி ஒரு வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை கண்டிப்பாக பாராட்டலாம்.

வித்தியாசமான கதை ஓக்கே படம் எப்படி செல்கிறது என பார்ப்போம்.

இதையும் படிங்க பாஸ்-  கடத்தப்பட்டாரா பவர் ஸ்டார் சீனிவாசன்? மனைவி போலீசில் புகார்

இவர்களின் காதல் சேர்ப்பு முயற்சியில் பூவரசன் -அனுபமா பிரகாஷ் ஜோடி சிக்குகிறது.

ஜாதி வெறி கொண்ட,  அனுபமா பிரகாஷ் வீட்டிற்கே சென்று பெண் கேட்டு பூவரசனுக்கு திருமணம் முடிவு செய்வதென முடிவு செய்து கோவையில் இருந்து பவர்ஸ்டார் சகிதம் மதுரைக்கு செல்கின்றனர்.

இந்த மூவரின் கதையை போகும் வழியில் கேட்கும் பூவரசன் இவங்க நம்ம காதலை சேர்த்து வைப்பாங்களா என்ற ரீதியில் பீதி ஆகிறார்.

இதையும் படிங்க பாஸ்-  சூப்பர் ஸ்டாருக்கு தெரியாதது பவர்ஸ்டாருக்கு தெரிஞ்சிருக்கு

அதற்கு தகுந்தாற் போல மதுரைக்கு போன இடத்திலும் பிரச்சனையை மூவரும் இழுக்க அது பூவரசனின் காதலை பட்டி டிங்கரிங் பார்க்கிறது இறுதியில் காதல் கை கூடியதா இல்லையா என்பது க்ளைமாக்ஸ்.

யோகிபாபுவின் காமெடியும் ஹீரோக்கள் செய்யும் காதல் குழப்பங்களும் படத்தை விரைவாக நகர்த்தி செல்லவும் நம்மை சுவாரஸ்யப்படுத்தவும் தவறவில்லை

இதையும் படிங்க பாஸ்-  பவன் கல்யாணை சூழ்ந்த சர்ச்சை

பூவரசனை மையப்படுத்தி தான் கதை என்றாலும் நான்கு ஹீரோக்களும் அட்டகாசமாக நடித்துள்ளனர் அனுபமா பிரகாஷ்  கேரளத்து பைங்கிளி ரூபஸ்ரீயும் நம்மை  கவர தவறவில்லை.

பவர் ஸ்டார் இப்படத்தில் காமெடிக்காக அதிகம் பயன்படுத்தப்படவில்லை என்றாலும் மற்ற விஷயங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஹீரோக்கள் செய்யும் குழப்பங்களை மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் கேசவன். கண்டிப்பாக பார்க்க கூடிய கலகலப்பான படமிது.