அவதார் அடுத்தடுத்த பாகங்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்த அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்களின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் படம் டிசம்பர் மாதம் 2009ல் வெளியானது. அந்த படம் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களை கவர்ந்தது. 237 மில்லியன் டாலரில் தயாரான அந்தப்படம் 2788 பில்லியன் டாலர் வசூல் செய்து, உலகிலேயே அதிக வசூலான படம் என்ற சாதனை படைத்தது. இதுவரை இந்த வசூலை எந்தப்படமும் முறியடிக்கவில்லை.

இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவருகிறது என செய்திகள் வெளியானது. ஆனால், அது தற்போதைக்கு இல்லை.. இன்னும் சில வருடங்கள் ஆகலாம் என ஜேம்ஸ் கேம்ரூன் தொடர்ந்து கூறி வந்தார். தற்போது அடுத்த பாகங்கள் தொடர்பான வேலையில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

தற்போது அதன் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அவதார் 2 – Dec 18, 2020
அவதார் 3 – Dec 17, 2021
அவதார் 4 – Dec 20, 2024
அவதார் 5 – Dec 19, 2025

ஓவ்வொரு பாகமும் டிசம்பர் மாதம் 3வது வெள்ளிக்கிழமை அன்று வெளியாகிறது. இந்த செய்தி சினிமா ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது.