அவதார் சாதனையை ரஜினி-ராஜமெளலி முறியடித்துவிடுவார்கள்: அல்போன்ஸ்புத்ரன்

10:01 காலை

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபலி 2’ படத்தின் ஓப்பனிங் வசூல் இதுவரை இந்திய திரையுலகம் காணாத மிகப்பெரிய வசூலாக உள்ளது. இருப்பினும் ‘கபாலி’ வசூலை இன்னும் இந்த படம் நெருங்கவில்லை என்பதே பாக்ஸ் ஆபீஸ் தகவல்

Loading...

இந்த நிலையில் தென்னிந்தியாவில் ரஜினி படத்தை அடுத்து மிகப்பெரிய வசூல் படங்களை கொடுத்து வரும் ராஜமெளலி, ஒருவேளை ரஜினியுடன் இணைந்தால் அந்த படம் ‘அவதார்’ சாதனையை முறியடித்துவிடும் என்று ‘பிரேமம்’ பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ரஜினி படத்தை இயக்குவது தன்னுடைய வாழ்நாள் ஆசைகளில் ஒன்று என்று ராஜமெளலி பேட்டியளித்திருக்கும் நிலையில் அவதார் படத்தின் வசூலை முறியடிக்க இருவரும் இணையவேண்டும் என்பதே அனைத்து தரப்பினர்களின் ஆசையாக உள்ளது.

(Visited 5 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393