மார்வெல் காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்கள் இணைந்து கலக்கிய ‘அவெஞ்சர்ஸ்’ (2012) படம் மெகா ஹிட்டானது. இதனையடுத்து வெளியான ‘அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்’ மற்றும் ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ ஆகிய இரண்டு பாகங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது, இந்த படத்தின் பார்ட் 4 ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ பரபரப்பாக தயாராகி வருகிறது. இதனை இயக்குநர்கள் ஆண்டனி ருஸ்ஸோ – ஜோ ருஸ்ஸோ சேர்ந்து இயக்குகிறார்கள்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தின் புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தை வருகிற ஏப்ரல் 26-ஆம் தேதி ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

– சிவா விஷ்ணு