இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பெரிய வசூலை அள்ளி தரவில்லை என்றாலும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. கார்த்தி, ஆண்ட்ரியா ,பார்த்திபன் மற்றும் பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் முதல் திரைப்படம் ஜாலியாகவும் இரண்டாவது பாதி சோழமன்னனின் கதையாகவும் வெளிவந்தது .

வெகுஜன ரசிகர்களை இப்படம் கவரவில்லை. சினிமாவில் வித்தியாச விரும்பிகளுக்கு இப்படம் மிகவும் பிடித்திருந்தது.

இந்நிலையில் செல்வராகவன் இன்று தனது டுவிட்டில் இவ்வாறு கூறியுள்ளார் எல்லோரும் எப்போது புதுப்பேட்டை 2 என்று கேட்கின்றனர் .

எனக்கு ஆயிரத்தில் ஒருவன் 2தான் இயக்க விருப்பம் சோழமன்னனின் பயணம் தொடர வேண்டும் என டுவிட்டியுள்ளார்.