Ayogya moive video song – நடிகர் விஜய் நடித்து வெளியாகவுள்ள அயோக்யா படத்தில் இடம் பெற்ற ‘கண்ணே கண்ணே’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

‘சண்டக்கோழி 2’ படத்துக்கு பிறகு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அயோக்யா’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கியுள்ளார். இதில் விஷால் போலீஸாக நடித்துள்ளார்.

அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார் அதோடு, கே.எஸ்.ரவிகுமார், பார்த்திபன், பூஜா தேவரியா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ‘டெம்பர்’ எனும் தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ கடந்த மாதம் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘கண்ணே கண்ணே’ என்கிற பாடல் வீடியோவை விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.