இங்கிலாந்தில் பிரமாண்டமாக திரையிடப்படும் பாகுபலி2

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்ட படம் பாகுபலி. இந்த படத்தை பிரமாண்டமாக இயக்கியிருந்தார் இயக்குனர் ராஜமவுலி.

தற்போது அப்படத்தின் தொடர்ச்சியான பாகுபலி2-வை இயக்கு வருகிறார் ராஜமவுலி. முதல் பாகத்தை விட இதில் கிராபிக்ஸ் மற்றும் இதர தொழில் நுட்பங்கள் அதிக அளவு பயன்படுத்தப்படு, பிரமாண்டமாக தயாராகியுள்ளதாக சமீபத்தில் ராஜமவுலி கூறியிருந்தார். இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் இப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இங்கிலாந்தில் இந்தியாவின் 70-வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் வகையில் பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்ட்டியூட் ஏப்ரல் 24 முதல் பல திரைப்படங்களை திரையிடவுள்ளது. இதில் திரையிடப்படும் படங்களில் ‘பாகுபலி 2’ம் இடம்பெற்றுள்ளது.

முக்கியமாக, இந்திய பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத் உள்ளிட்ட பல பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு இப்படத்தை காணவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனாலும், இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை.