ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளிவரும்போதோ அல்லது வெளிவந்த பின்னரோ அந்த படம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தனது டுவிட்டரில் தெரிவித்து வருவதை பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா ஒரு வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி 2′ திரைப்படம் வெளிவரும் நேரத்திலும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த கருத்து பாகுபலி 2’ படத்தின் இயக்குனரை உயர்த்தியும் மற்ற இயக்குனரை தாழ்த்தியும் செய்த பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.

ராம்கோபால் வர்மா கூறியது இதுதான்: இயக்குனர் ராஜமௌலியின் ‘பாகுபலி 2′ படம் எனக்கு ஒரு வலுவான உணர்வை ஏற்படுத்துகிறது. அதில், இந்தப் படம் திரைக்கு வந்த பிறகு இந்தியாவில் இருக்கும் மற்ற இயக்குனர்கள் அனைவரும் தாம் தயாரிக்கும் படங்கள் அனைத்தும் டிவி சீரியல் இயக்குனர்கள் உருவாக்குவது போன்ற என்ற உணர்வை ஏற்படுத்தும்’ என்று கூறியுள்ளார்.

இந்த கருத்து மற்ற இயக்குனர்களை ஆத்திரத்தை வரவழைத்துள்ளது. பாகுபலி பிரமாண்ட படம் தான் சந்தேகமில்லை. அதே நேரத்தில் பிரமாண்ட படம் இயக்குபவர் மட்டுமே இயக்குனர் அல்ல, குறைந்த பட்ஜெட்டில் நல்ல கருத்துக்களை கூறி படம் இயக்குபவரும் நல்ல இயக்குனர்தான்’ என்று ராம்கோபால் வர்மாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.