ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 24

ரூ.50 கோடி வசூல் – கேரளாவில் வரலாறு படைத்த பாகுபலி

12:44 மணி

கேரளாவில் வெகு விரைவாக ரூ.50 கோடி வசூல் செய்த படம் என்ற பெருமையை பாகுபலி படம் தட்டிச் சென்றுள்ளது.

பாகுபலி படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாள ஆகிய அனைத்து மொழிகளிலும் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. அதிலும் கேரளாவில், இந்தப் படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. மலையாள படங்களில் மோகன்லால் நடித்து சமீபத்தில் வெளியான புலிமுருகன் படமே ரூ.50 கோடி வசூல் செய்தது. அதுவும், நிறைய நாட்கள் ஓடிய பின்பே, இந்த வசூலை அந்த படம் எட்டியுள்ளது. ஆனால், அங்கு வெளியான பாகுபலி படம் வெகு விரைவாக ரூ.50 கோடியை வசூல் செய்து வரலாறு படைத்துள்ளது.

அதேபோல், பாலிவுட்டில் அமீர்கான் நடித்த தங்கல் படமே ரூ.350 கோடி வசூல் செய்து முதலிடத்தில் இருந்தது. அதையும் பாகுபலி மிஞ்சி விட்டது. ஒரு வெளிமாநில மொழி படம், மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியான பாகுபலி இந்த வெற்றியை பெற்று, கேரள மற்றும் பாலிவுட்காரர்களை வாயை பிளக்க வைத்துள்ளது.

(Visited 28 times, 1 visits today)
The following two tabs change content below.
மகாலட்சுமி
இவர் இணையதள செய்திகள் பிரிவில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சினிமா மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் கொட்டுப்பதில் முதன்மையானவர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பதில் சிறப்பு புலமை வாய்ந்தவர். சினிமா துறையில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பழம்பெரும் நடிக- நடிகைகள், இயக்குனர்கள் குறித்த சுவையான சம்பவங்களை தொகுத்து சிறப்பு கட்டுரைகளாக வழங்குவதில் பெயர் பெற்றவர். தொடர்புகொள்ள- mahamurugan@gmail.com