இந்திய சினிமா வரலாற்றில் எந்த திரைப்படமும் இதுவரை செய்யாத வசூலை பாகுபலி படம் வசூலித்துள்ளது.

ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பாகுபலி2 படம் பாக்ஸ் ஆபிசில் மெஹா ஹிட் அடித்தது. பாலிவுட், கேரள ஆகிய மாநிலங்களில் எந்தப்படமும் செய்யாத வசூலை இந்தப்படம் வசூலித்துள்ளது. வெளியான 10 நாளில் இந்தப்படம் ரூ.1000 கோடியை வசூல் செய்ததாக கூறப்பட்டது. ஆனால், இதுபற்றி படக்குழு எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தது.

இதையும் படிங்க பாஸ்-  மெர்சல்' சாதனையை 'காலா' முறியடிக்காதது ஏன்?

இந்நிலையில், பாகுபலி படக்குழு தனது அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கதில் “பாகுபலி2 ரூ.1000 கோடியை வசூலித்துள்ளது. இந்த நாள் இந்திய சினிமா வரலாற்றில் நினைவு கொள்ளப்படும். உங்களின் ஆதரவுக்கு நன்றி” என குறிப்பிட்டார்கள்.

இதன் மூலம் இந்திய சினிமா வரலாற்றில் ரூ. 1000 கோடியை வசூல் செய்த முதல் படம் என்ற பெருமை பாகுபலி தட்டிச் சென்றுள்ளது. இந்தப் படம் இன்னும் பல கோடிகளை வசூலித்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.