கிசுகிசுக்கள் வருவது சகஜம்தான் – பிரபாஸ்

பாகுபலி திரைப்படத்தின் மூலம் பலரின் மனதை கவர்ந்தவர் நடிகர் பிரபாஸ்.  உலக அளவில் வரலாறு காணாத வெற்றியை இப்படம் பெற்றதற்கு காரணம் SS ராஜமௌலியின் பிரமாண்டமான இயக்கமும், பிரபாஸின் துணிச்சலான நடிப்பும் தான் . பாகுபலி படத்தின் மூலம் பிரபாஸிற்கு ரசிகர் கூட்டம் கூடியது, பல பெண்களின் கனவு நாயகனாகவும் இவர் திகழ்கிறார். அத்திரைப்படத்தில் அவர் பேசிய சில வசனங்கள் பெண்களின் மனதை மிகவும் கவர்ந்தது. பாகுபலி  பாகம் இரண்டிற்கு பிறகு பிரபாஸிற்கு 6000 வரன்கள் வந்தவண்ணம் உள்ளனர்.


இதனிடையில் பாகுபலியில்  ஜோடியாக தேவசேனா கதாபாத்திரத்தில் நடித்த அனுஷ்காவிற்கும் பிரபாஸிற்கும் இடையில் காதல் கனிந்துள்ளது என பல கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் பில்லா , மிர்ச்சி , பாகுபலி இரண்டு பாகங்களிலும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில்  பிரபாஸிடம் தன திருமணத்தை குறித்து விசாரித்தபோது. “என் ரசிகர்கள் என் திருமணத்தை பற்றி தற்போதைக்கு கவலை பட வேண்டாம், ஏனென்றால் நான்  அது குறித்து இன்னும் யோசிக்கக்கூட இல்லை ” என்று அவர் கூறினார். அனுஷ்காவுடன் காதல் என்ற கிசுகிசுவை பற்றி கேட்டபோது ” முன்னணி கதாநாயகிகளுடன் சில படங்கள் தொடர்ந்து நடித்தாலே இந்த மாதிரியான கிசுகிசுக்கள் வருவது சகஜம்தான்” என்றும் , தங்களுக்கிடையில் அப்படி எதுவும் இல்லை என்றும் பிரபாஸ் கூறியுள்ளார்.