‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ‘தல’ அஜித் நடித்து வருகிற ‘விஸ்வாசம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. இந்த படத்தை தற்போது வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் நயன்தாரா, ரோபோ சங்கர், யோகி பாபு, தம்பி ராமையா என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.

‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த பேபி அனிகா, தற்போது இப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அஜித்தின் மகளாக நடித்துள்ளார்.

இப்படத்தில் விளையாட்டு வீராங்னையாக உருவாக விரும்பும் அவரை ஊக்கம் கொடுத்து வளர்க்கும் நேசமிகுந்த தந்தையாக அஜித் இந்த படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தைத் தொடர்ந்து, ‘தல 59’…, ‘தல 60’… என அடுத்தடுத்து அஜித் நடிக்கும் படங்களின் லேட்டஸ்ட் அப்டேட்கள் வெளிவந்து கொண்டே உள்ளது