விஜய் தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஓவியா வெளியேற்றத்திற்கு பின் பரபரப்பின்றி சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே காயதிரி கெட்ட வார்த்தைகள் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஜூலி மற்றும் ஓவியாவை அவ்வாறு பேசினார். இதற்காக கமல்ஹாசனும் காயதிரிக்கு குட்டு வைத்தார். இதனால் கோபம் அடைந்த காயத்ரி எனை திருத்த என் அம்மாவுக்கு மட்டுமே உரிமை உண்டு என்று அனல் கக்கினார்.

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் தான் ஏன் கெட்ட வார்த்தை பேசுகிறேன் என்பதற்கு விளக்கம் ஒன்றை அளித்தார். அதில், ஆணாதிக்கம் அதிகமுள்ள துறையில் நான் பணியாற்றுகிறேன். அதற்காகவே இப்படி ஒரு வேஷம் போடவேண்டியதாகி விட்டது. இதனால்தான் கெட்ட வார்த்தை பேச பழகிக்கொண்டேன். மனசில் பட்டத்தை கேட்டுவிடுவேன் ஆனால் எந்த கெட்ட வார்த்தையும் மனசில் இருந்து வராது என்றார்.

இப்ப புரியுதா மக்களே காயத்ரி ஏன் கெட்ட வாா்த்தை பேசுகிறார் என்று?