பிரபல விளையாட்டு வீரர்கள் சாய்னா நேவால் மற்றும்
காஷ்யப் ஆகிய இருவரும் வருகிற டிசம்பர் மாதம்
திருமணம் செய்ய கொள்ள திட்டமிட்டு இருப்பதாக
தெரியவந்துள்ளது.

விளையாட்டு வீரர்கள் இருவரும்நீண்ட காலமாக
காதலித்து வந்ததையடுத்து, இருவீட்டார்கள் சம்மதம்
தெரிவித்த நிலையில், தற்போது திருமண தேதி உறுதி
செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வருகிற டிசம்பர் 16-ல் திருமணம் நடத்த
உள்ளதாகவும், இதற்கு மிக எளிமையாக 100 பேருக்கு
மட்டுமே அழைப்பு விடப்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது. இதையடுத்து, வரும் டிசம்பர் 21-ல்
பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு
திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

28 வயதாகும் சாய்னா நேவால் 2010 மற்றும் 2018 ஆண்டு
இரண்டு காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் பதக்கம்
வென்றார். 2012 ஒலிம்பிக்கில் வெண்கலம்
பதக்கம்வென்றார். ஆசிய விளைாயட்டு போட்டிகளில்
பங்கேற்றுள்ளார். சர்வதேச பேட்மிண்டன் தரவரிசையில்
முதலிடத்தைப் பிடித்தவர் எனபது குறிப்பிடத்தக்கது.

மேலும், 32 வயதாகும் விளையாட்டு வீரர் காஷ்யப் கடந்த
2013-ல் சர்வதேச பேட்மிண்டன் தரவரிசையில் 6வது
இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து,
2014-ஆம் ஆண்டில் காமன்வெல்த் போட்டியில் தங்கம்
வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவர்களின் திருமணத்திற்கு ரசிகர்கள்
தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில்
தெரிவித்து வருகின்றனர்.