கடந்த வெள்ளியன்று வெளியான எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபலி 2’ திரைப்படம் ஆறே நாளில் கிடைத்த  வசூலின் மூலம் இந்தியாவில் மிகப்பெரிய வசூலை அள்ளிய திரைப்படம் என்ற பெயரை தட்டி சென்றுள்ளது. இதுவரை அமீர்கானின் ‘பிகே’ திரைப்படமே இந்தியாவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை இருந்துள்ள நிலையில் இந்த படம் அந்த சாதனையை உடைத்துள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  தமிழன் சாதியால்தான் பிரிந்து கிடக்கிறான்: நினைவேந்தல் நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்ட பா.ரஞ்சித்

‘பாகுபலி 2’ திரைப்படம் வெளியான முதல் நாளே தமிழகத்தில் ரூ.10 கோடியும் ஆறு நாட்களில் ரூ.54 கோடியும் வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படம் உலக அளவில் ரூ.780 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வசூல் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதால் வெகுவிரைவில் ரூ.1000 கோடி இலக்கை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தை பொருத்தவரையில் இதற்கு முன்னர் ஒரு வாரத்தில் ரஜினியின் ‘கபாலி’ ரூ.53 கோடியும், இளையதளபதி விஜய்யின் ‘பைரவா’ ரூ.52 கோடியும், தல அஜித்தின் ‘வேதாளம்’ ரூ.50 கோடியும் வசூல் செய்த நிலையில் இந்த படம் ரூ.54 கோடி வசூல் செய்து முதலிடத்தை பெற்றுள்ளது. சூப்பர் ஸ்டார் முதல் மாஸ் நடிகர்களின் படங்களின் வசூலை தூக்கி சாப்பிட்டதற்கான உண்மையான காரணம் இந்த படத்தின் பிரமாண்டமே என்பது குறிப்பிடத்தக்கது.