‘பாகுபலி 2’ படத்திற்கு ‘ஆஸ்கார் விருது’ கிடைக்குமா?

பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், நாசர் நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி 2’ திரைப்படம் கடந்த வாரம் இதே நாளில் வெளியாகியது. வெளியான ஒரே வாரத்தில் ரூ.700 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இந்த படம் இன்னும் ஓரிரு தினங்களில் ரூ.1000 கோடியை தொட்டுவிடும் என்றே கருதப்படுகிறது. உலக அளவில் இதுவரை டைட்டானிக், ஹாரிபாட்டர், லார்ட் ஆப் தி ரிங்ஸ் ஆகிய படங்கள் மட்டுமே ரூ.1000 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சற்று முன்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ‘பாகுபலி 2’ படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப மத்திய அரசிடம் கூறி ஆவண செய்யப்படும் என்று கூறினார்.

மேலும் எஸ்.எஸ்.ராஜமெளலி உள்பட ‘பாகுபலி 2’ படக்குழுவினர் அனைவருக்கும் ஆந்திர அரசின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்றும் ராஜமெளலியிடம் பாராட்டு விழா தேதி குறித்து விரைவில் ஆலோசிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.