தீர்ந்தது பிரச்சனை! தமிழகத்தில் ‘பாகுபலி 2’ ரிலீஸ்

இந்தியாவின் மிக பிரமாண்டமான திரைப்படமான ‘பாகுபலி 2’ திரைப்படம் நேற்றிரவே வெளிநாடுகளில் ரிலீஸ் ஆகிவிட்டது. இந்நிலையில் அஜித், விஜய் நடிகர்களின் படங்களுக்கு இணையாக இந்த படமும் அதிகாலை காட்சி திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இன்று அதிகாலை கேடிஎம் ரிலீஸ் செய்யாததால் இந்த படத்தின் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. எனவே ‘பாகுபலி ‘ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் இடையில் விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் இன்று காலை 11 மணியளவில் பாகுபலி-2 படத்தின் தமிழ் பதிப்பு, தமிழகத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்