சென்னையின் நம்பர் ஒன் இடத்தை பிடித்த உலகமே கொண்டாடும் ‘பாகுபலி 2’

100 வருட சினிமா வரலாற்றில் இதுவரை சென்னையில் எந்த படமும் வசூல் செய்யாத மிகப்பெரிய தொகையை ‘பாகுபலி 2’ திரைப்படம் பெற்றுள்ளது. திருட்டு டிவிடி, இணையதளங்களில் வெளியீடு ஆகிய தடைகளையும் தாண்டி சென்னையில் இந்த படம் 4வது வாரமாக ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

‘பாகுபலி 2’ திரைப்படம் வெளியான ஏப்ரல் 28ஆம் தேதியில் இருந்து நேற்று வரை தமிழ்ப்பதிப்பு மட்டுமே சுமார் ரூ.14 கோடி வசூல் செய்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் சேர்த்து ரூ.16கோடி வசூலை நெருங்கிவிட்டது. இதுவரை சென்னையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த ‘கபாலி’ சாதனை முறியடிக்கப்பட்டு அசைக்க முடியாத முதலிடத்தை ‘பாகுபலி 2’ பெற்றுள்ளது.

ரூ.16 கோடி வசூல் என்பதை முறியடிக்கும் வகையில் ரஜினியின் ‘2.0’, அஜித்தின் ‘விவேகம்’ மற்றும் விஜய்யின் ‘தளபதி 61’ படங்களின் வசூல் இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்