வலைத்தளங்களில் பரவி வரும் பிரபாஸ் போட்டோ

பிரபாஸ் நடித்த சாித்திர படமான பாகுபலி 2 உலகளவில் பேசப்பட்டு வருகிறது. அதுவும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. 1000 கோடி தாண்டி வசூல் செய்துள்ளது என்றும் 1500 கோடி தாண்டியும் சாதனை படைத்து வருவது குறித்து செய்திகள் தொடா்ந்து வந்தபடியே உள்ளது.

பாகுபலி படமானது இரண்டு பாகங்களாக வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்ததை தொடா்ந்து அந்த படத்தில் நடித்த நடிகா், நடிகைகள் உச்ச கட்ட புகழ் பெற்று வருகின்றனா். அந்த படத்தில் நடித்ததன் மூலம் நடிகா் பிரபாஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலடைந்து வருகிறாா்.  தற்போது அவா் சாஹோ படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கிறாா். பாகுபலி படத்திற்காக பிரபாஸ் எந்தவொரு படத்திலும் நடிக்காமல் 5வருடம் காத்திருந்தன் போில் அவருக்கு இந்த மாபெரும் புகழ் கிடைத்துள்ளது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவரது ஆதாா் அட்டை வைரலாக பரவி வருகின்றது. இந்த அட்டை அவருடையது தானா என்ற சந்தேகம் ரசிகா்கள் மத்தியில் எழுந்துள்ளது. என்னவென்றால் அந்த ஆதாா் அட்டை போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனா். இப்போது எல்லா பெண்களும் பிரபாஸ் கட்டிக்க ஒத்துக்கொள்வாா்களா என்று மீம்ஸ் போட்டு வருகின்றனா்.