வெளிவந்துவிட்டது பாகுபலி சேலைகள்: ஜவுளிக்கடைகளில் அலைமோதும் கூட்டம்

02:35 மணி

முன்பெல்லால் ரஜினி படங்கள் வந்தால் அந்த படத்தின் பெயரில் சேலைகள் முதல் பல பொருட்கள் வெளிவந்து வியாபாரத்தில் பட்டையை கிளப்பும். ஆனால் இந்த டிரெண்ட் கடந்த சில வருடங்களாக காணாமல் போயிருந்தது.

இந்த நிலையில் உலகமே போற்றி கொண்டாடி வரும் ‘பாகுபலி’ படத்தின் பெயரில் தற்போது சேலைகள் வந்துவிட்டது.

சேலையின் முந்தானையில் பிரபாஸ், அனுஷ்கா படங்களுடன் கூடிய இந்த சேலைக்கு பெண்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால் ஜவுளிக்கடைகளில் பாகுபலி 2 சேலைகள் பரபரப்பாக விற்பனை ஆகி வருகிறது.

மேலும் பாகுபலி’ சேலைகள் மட்டுமின்றி ‘பாகுபலி’ நகை வகைகளும் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன, ஹைதராபாத்தில் உள்ள அமர்பள்ளி ஜூவல்லர்ஸ் என்ற நகைக் கடையில் இரண்டு வகையான பாகுபலி 2 நகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிறுவனம்தான் ‘பாகுபலி 2’ படத்திற்கு தேவையான நகைகளை செய்து கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது

The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393