சமீபத்தில் வெளியான ‘பாகுபலி 2’ திரைப்படம் உலகம் முழுவதிலும் வசூலில் மிரட்டியது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இயக்குனர் கமலக்கண்ணன் என்று கூறினால் அது மிகையல்ல.

இந்நிலையில் கமலக்கண்ணன் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாசின் ‘ஸ்பைடர்’ படத்திற்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்திலும் பல மிரட்டலான காட்சிகள் கிராபிக்ஸில் அமைக்க வேண்டிய நிலை இருப்பதால் அவருக்கு இந்த படம் ஒரு சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஸ்பைடர் படத்திற்காக தனது குழுவினர்களுடன் விரைவில் கமலக்கண்ணன் ரஷ்யா செல்லவுள்ளதாகவும், அங்கேயே சில மாதங்கள் தங்கியிருந்து இந்த படத்தின் VFX பணிகளை முடிப்பார் என்றும் கருதப்படுகிறது. இவருடைய கைவண்ணத்தில் உருவான ‘பாகுபலி 2’ திரையில் ரசிகர்களை மிரட்டியதை போல, ‘ஸ்பைடர் படமும் மிரட்டுமா? எனப்தை பொறுத்திருந்து பார்ப்போம்