ஒருசில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த ‘பாகுபலி 2’ டிக்கெட்டுக்கள்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவான மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய ‘பாகுபலி 2’ திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில் சென்னை உள்பட தமிழகத்தில் இந்த படம் ரிலீஸ் ஆவதில் கடந்த சில நாட்களாக ஒருசில சிக்கல் இருந்தது.

இதனால் நேற்று வரை முன்பதிவு தொடங்காமல் இருந்த நிலையில் நேற்று விடிய விடிய நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் இன்று காலை முதல் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

முன்பதிவு தொடங்கப்பட்ட ஒருசில நிமிடங்களில் சென்னையின் முக்கிய திரையரங்குகள் அனைத்திலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கான அனைத்து காட்சிகளின் டிக்கெட் முன்பதிவுகள் 98% முடிந்துவிட்டது. ஸ்க்ரீனுக்கு மிக அருகில் உள்ள இருக்கைகள் மட்டுமே ஒன்றிரண்டு காலியாக உள்ளது.

இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 9000 திரையரங்குகளில் வெளியாவதால் முதல் நாள் வசூலே ரூ.85 கோடி தேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.