இனியாவை கலாய்த்த பாக்கியராஜ்!

“வாகை சூட வா” திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை இனியா. ஏற்கனவே பல மலையாள படங்களில் நடித்துள்ள இவர், அடுத்த மாதம் வெளியாகவுள்ள சதுரடி 3500 எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். ரைட் வியூ சினிமாஸ் தயாரிப்பில் ஆர் பி எம் சினிமாஸ் வெளியிடும் இப்படித்த்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் , தயாரிப்பாளர் எஸ்.தாணுவும் இணைந்து இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லரை வெளியிட இயக்குனர் பாக்கியராஜ் அதை பெற்றுக்கொண்டார்.

அறிமுக நாயகனாகிய நிக்கில் மாத்தியூவுடன் திரையுலத்தைச் சார்ந்த பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர், ஆனால் கதாநாயகி இனியா மட்டும் வரவில்லை . கதாநாயகி வராதது படக்குழுவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. இதையடுத்து இயக்குனர் பாக்கியராஜ் பேசும்போது “இனியா இவ்விழாவிற்கு வராதது அவருக்குத்தான் நஷ்டமே தவிர படக்குழுவிற்கு இல்லை என்று கூறினார் , “கண்ணடிச்சு கூப்பிட்டும்வராத பொம்பள, கை பிடிச்சு இழுத்தா மட்டும் வந்துடவாபோகுது ” என்று தான் எழுதிய வசனத்தை பாக்கியராஜ் தனக்குரிய கிண்டலான பணியில் கூறினார்.