Home Uncategorized பாலா பட கதாநாயகி ரெடி

பாலா பட கதாநாயகி ரெடி

இயக்குனர் பாலாவின் படங்களுக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பு அதிகம். மிகுந்த கஷ்டங்களுக்கிடையில் தனது படத்தை எடுத்து வெளியிட்டாலும் சில படங்கள் போதிய வெற்றியை பெறவில்லை.

2004ம் ஆண்டு வந்த பிதாமகனுக்கு பிறகு இவரின் படங்கள் போதிய வெற்றியை பெற தவறிவிட்டது.

மிகுந்த சிரமப்பட்டு ஆரியா உடல் வருத்தி ஜடாமுடி எல்லாம் வைத்து நடித்த நான் கடவுள் படம் கூட போதிய வெற்றியை பெறவில்லை.

சமீபத்தில் வந்த நாச்சியாரும் அப்படித்தான் ஆனால் பாலா பாலா என இவரின் படம் ரிலீசாகும்போதும் அதை பற்றிய செய்திகள் அடுத்து என்ன படம் எடுக்கிறார் என ரசிகர்களை விரும்ப வைப்பதில்தான் இவரது மேஜிக் இருக்கிறது.

அப்படியாக அர்ஜூன் ரெட்டி என்ற திரைப்படத்தை நடிகர் விக்ரம் மகனை வைத்து தமிழுக்காக சில மாற்றங்கள் செய்து எடுத்து வருகிறார்.

இந்த படத்துக்கான கதாநாயகி அறிவிக்கப்படாமல் இருந்தார் இந்நிலையில் மேகா சவுத்ரி என்ற கொல்க்கத்தாவை சேர்ந்த பெண் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார்.

எனவும் விரைவில் இது பற்றிய தகவல்கள் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.