இன்று வெளியாகியுள்ள பிக் பாஸ் புரோமோ வீடியோ எதிர்பார்ப்பை அதிகாரித்துள்ளது. முதல் புரோமோ வீடியோவில் கட்டி பிடி கட்டிபுடா பாடல் புகழ் மும்தாஜ் அழுகிறார்.. அவர் ஏன் அழுகிறார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்து புரோமோ வீடியோ. அதனால் இன்றைய பிக் பாஸ் வீட்டில் விறுவிறுப்பும் சுவராசியமும் அதிகமாக இருக்கும். இப்படி பிக் பாஸ் வீட்டில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

தற்போது இரண்டாவது புரோமோவில் சென்ட்ராயன் பாலாஜி மனைவி நித்யாவிடம் தனியாக எவ்வளவு நாள் வாழ முடியும் என்றும் கணவருடன் சேர்ந்து தான் இருக்கணும் என்பது போன்ற சில அறிவுரைகளை கூறுகிறார். அதற்கு நித்யா நான் தனியாக இருக்கிறேன் என்று யார் சொன்னது, ஒவ்வொருத்தருக்கும் ஒரு சுதந்திரம் இருக்கும், கண்ட்ரோல் செய்தால் யாருக்கும் பிடிக்காது. குறிப்பாக உங்க தங்கச்சியை மீடியாவுக்கு போய் இரண்டு நபர்களின் புகைப்படத்தை வைத்து இவர்கள் இருவருக்கும் என்னுடன் தொடர்பு உள்ளது என சொன்னால் நீங்கள் ஒத்துக்கொள்வீவர்களா? இது போல் எந்த கணவராவது செய்வாரா? என நித்யா அவரின் பக்கம் உள்ள நியாத்தை கூறுகிறார்.

பாலாஜி அதற்கு இந்த அவமானம் தேவை என முறைத்தபடி பாலாஜி கூறுகிறார்.