நடிகர் விஜய்க்கு இன்று 44வது பிறந்த நாள். இதானை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பல இடங்களில் உணவு வழங்கியும், எழை மக்களுக்கு உதவிகள் என பல நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன.

இந்நிலையில் ஓசூரில் விஜய் ரசிகர்கள் தலைக்கவசம் அணிவது குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். இந்த பேரணியை இப்பேரணியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார். விஜய் அரசியலுக்கு வருவார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அமைச்சர் ஒருவர் விழாவில் கலந்துகொண்டது பரபரப்பாக பேசப்பட்டது. .