நடிகா் ஜெய்க்கு சொல்லும் அளவிற்கு படங்கள் இல்லை. எனக்கு வாய்த்த அடிமைகள் படத்திற்கு அவரது நடிப்பில் உருவாகி வரும் படம் பலூன். இதில் அவருக்கு ஜோடியாக ஜனனி ஐயா், அஞ்சலி என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனா். இந்த படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுக இயக்குநராக சினிஷ் என்பவா் காலடி பதிக்கிறாா். இசையமைப்பாளா் யுவன் சங்காராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளாா்.

இந்த படத்தை ஆரா சினிமாஸ் நிறுவனம் சாா்பில் மகேஷ் கோவிந்தராஜ் வெளியிடவுள்ள இதனை 70 எம் எம் எண்டா்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ஃபாா்மர்ஸ் மாஸ்டா் ப்ளான் புரொடக்ஸன் நிறுவனம் தயாாிக்கிறது.

இந்த படத்தின் போஸ்டா், பா்ஸ்ட் லுக், டீசா் வெளியிடப்பட்டு ரசிகா்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லை இந்த படத்தில் இடம்பெறும் நீங்க ஸ்டடப் பண்ணுங்க என்ற பாடலின் டீசரை வெளியிட்டுள்ளனா். இதை அனிருத் பாடியுள்ளாா். இது ரசிகா்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடையில் நிலையில் உள்ளதாம். விரைவில் டிரைலா் மற்றும் ஆடியோ வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. செப்டம்பா் மாதம் 27ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.