ஜெய், அஞ்சலி நடித்த ‘பலூன்’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சுமாரான இரண்டாம் பாதி படத்தால் இந்த படம் தற்போது போட்ட முதலீடை எடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் சிம்பு நடித்த ‘AAA’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர், இயக்குனர் போல பலூன் இயக்குனர் சினிஷ், தனது டுவிட்டரில் புலம்பியுள்ளார்

இதையும் படிங்க பாஸ்-  சிம்புவின் மாநாடு படத்தில் இணையும் மற்றொரு பிரபல நடிகர் !

பலூன் ஒரு வெற்றிப்படம் என்றும், ஆனால் ஒருசிலர் நடந்து கொண்ட முறையால் இந்த படத்தின் தயாரிப்பாளருக்க்கு கூடுதல் செலவு ஆகிவிட்டதாக இயக்குனர் சினிஷ் தெரிவித்துள்ளார். அதேபோல் வரும்போது அமைதிப்படை அமாவாசை போல் வந்து பின்னர் ஓரிரு படங்கள் ஓடியவுடன் தங்கள் சுயரூபத்தை காட்டுகின்றார்கள் என்றூம் அவர் ஜெய்யை மறைமுகமாக தாக்கியுள்ளார்.