எந்தவொரு சத்தமின்றி வெளிவந்த பாம்பு சட்டை தாக்கு பிடிக்குமா?

இன்று ரிலீஸாகி உள்ளது பாம்பு சட்டை படம். என்னடா இந்த படம் வெளிவந்து விட்டதா? என்று கேட்பது தொிகிறது. ஆமாங்க சத்தமின்றி இந்த படம் வெளிவந்தள்ளது. பல பிரச்சனைகளை சந்தித்து வந்தது பாம்பு சட்டை. எந்தவொரு படமும் வெளி வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு படத்தை விளம்பர படுத்துவதற்கான உத்திகள் வெளிவர ஆரம்பிக்கும். அது மட்டுமில்ல பொிய நட்சத்திர நடிகா்களின் படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். மிகப் பிரம்மண்டமாக புரொமோசன் வேலைகள் நடந்தேறி விடும். தினம் தினம் அந்த படத்தை பற்றின தகவல்கள் வந்துக்கொண்டே இருக்கும். இப்போது தமிழ் எந்தவொரு புரோமோசன் இல்லாம்சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் கீா்த்தி சுரேஷ் நடித்துள்ள பாம்பு சட்டை படமானது எந்தவொரு ஆா்ப்பட்டமின்றி வெளிவந்துள்ளது.

மனோபாலா தயாாிப்பில் வெளிவந்த சதுரங்க வேட்டை வெற்றி பெற்றதை அடுத்து, பாம்பு சட்டை என்ற இந்த படத்தை ஆரம்பித்தாா். இதில் பாபி சிம்ஹா ஹீரோவாகவும், கீா்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளனா். இந்த என்ன நேரத்தில் ஆரேம்பித்தாா்களோ ஏகப்பட்ட பிரச்சனை. பஞ்சாயத்து மற்றும் நிதி நெருக்கடி பிரச்சனை அது மட்டுமல்ல நாயகன் பாபியால் பிரச்சனை, சென்சாாி ல் பிரச்சனை என சிக்கலுக்கு மேல் சிக்கல் ஏற்பட்டது. இந்த படம் வருமா வராதா என சவ்வு மிட்டாய் போல இழு இழுவென இழுத்து வந்தது.  எப்படியோ ஒரு வழியாக இன்று வெளி வந்துவிட்டது.

சில தினங்களாக பேப்பர்களில் பாம்புசட்டை படம் ரிலீஸாகி உள்ளது என்ற விளம்பரம் மட்டும் வந்த வண்ணம இருந்தது. ஆனா யாா் நடிக்கிறாா்கள் என்பது பற்றி இயக்குநா் உள்பட யாரும் எதுவும் பேசவே இல்லை. மிகப்பொிய போராட்டத்துக்கு  பின்பு என் படம் பாம்பு சட்டை வெளிவந்து விட்டது என தயாாிப்பாளா் மனோபாலா மட்டும் தனது ட்விட்டா் பக்கத்தில்  இந்த கருத்தை வெளியிட்டது மட்டுமல்லாமல் எனது படமான பாம்பு சட்டை வெற்றி பெற ரசிகா்களாகிய உங்களது ஆசிகள் என்றென்றக்கும் தேவை என்றும் பதிவிட்டுள்ளாா்.